விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டங்களுடன் லீக் போட்டிகள் நிறைவு பெறுகிறது.
இதில் இன்று(மே21) மாலை 3.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.
இரவு 7.30 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.
இந்நிலையில், ப்ளே ஆஃப் சுற்றுக்கு குஜராத் டைட்டன்ஸ் அணியும் , சென்னை சூப்பர் கிங்ஸ் , லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டன.
இதையடுத்து கடைசி இடத்திற்கான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் இருக்கின்றன.
இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது அவசியம்.
ஏனென்றால் சின்னசாமி மைதானத்தில் நடக்கும் அடுத்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வெற்றி பெற்றால் ஏற்கனவே மும்பையை விட அதிக ரன் ரேட்டில் இருக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நாலாவது இடத்திற்கு முன்னேறி விடும்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். ஆனால், அதற்கு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தோற்கவேண்டும்.
ஒருவேளை இரு அணிகளும் இன்றைய கடைசி போட்டியில் தோல்வி அடைந்தால் ரன்ரேட் அடிப்படையில் அதிக ரன்ரேட் கொண்டுள்ள அணி தான் கடைசி அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
“தொலைச்சி கட்டிருவேன்”: நள்ளிரவில் போலீசாரை எச்சரித்த அமைச்சர்!