கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் வெற்றியை பதிவு செய்தது மும்பை இந்தியன்ஸ் அணி. mumbai indians uproar against kkr at wankade
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை தனது சொந்த மைதானமான வான்கடேவில் இன்று (மார்ச் 31) இரவு எதிர்கொண்டது மும்பை இந்தியன்ஸ் அணி.
டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி வெறும் 116 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக ரகுவன்ஷி 26 ரன்களும், ரமன் தீப் சிங் 22 ரன்களும் அடிக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.
மும்பை அணி தரப்பில் அஸ்வனி குமார் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

தொடர்ந்து மும்பை அணி களமிறங்கிய நிலையில் ரோகித் சர்மா 13 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து வில் ஜாக்ஸும் 16 ரன்களில் ஆட்டமிழந்தார்.
எனினும் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக விளையாடிய ரிக்கில்டன் அரைசதம் (62*) அடித்து அசத்தினார். அவருடன் இறுதி வரை களத்தில் நின்ற சூர்யகுமார் யாதவ் (27*) மும்பை அணியை வெற்றி பெறச் செய்தார்.
இதன்மூலம் நடப்புத் தொடரின் முதல் இரண்டு போட்டியிலும் தோல்வியை சந்தித்த மும்பை இந்தியன்ஸ் தனது சொந்த மைதானத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது.
அதேவேளையில் தொடர்ந்து இரண்டாவது தோல்வியை தழுவியுள்ள நடப்புச் சாம்பியன் கொல்கத்தை நைட் ரைடர்ஸ் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு சென்றுள்ளது.