தோனிக்கு சி.எஸ்.கே பெருமை… ரோஹித்துக்கு சிறுமை செய்யும் மும்பை!

Published On:

| By Kumaresan M

ஐ.பி.எல் தொடருக்கான மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி ருதுராஜ், ஜடேஜா, பதிரானா மற்றும் தோனி ஆகியோரை ஏலத்திற்கு முன்பே தக்கவைத்து விடும்  என தெரிகிறது.

இந்த சூழலில் சிஎஸ்கே அணிக்கு கிடைக்கும் இரண்டு ஆர்டிஎம் கார்டை பயன்படுத்தி கான்வே, சிவம் துபே ஆகியோரை வாங்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

சென்னை அணி கேப்டன் தோனியை இவ்வளவு பெருமைப்படுத்தும் போது, மும்பை  அணி, தனது அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவை தொடர்ந்து அவமானப்படுத்தி வருகிறது.

மும்பை அணியில்  ஹர்திக் , பும்ரா, சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு அடுத்துதான் ரோஹித் தக்கவைக்கப்படுவார் என தெரிகிறது. அவருக்கு 10 கோடிக்கும் குறைவான தொகைதான் கிடைக்கும் என்றும் சொல்கிறார்கள்.  எனினும்,  அதனை ரோஹித் ஏற்றுக்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், மும்பை அணியில் யார் யாரை தக்கவைக்க வேண்டும். அவர்களுக்கு எவ்வளவு ஊதியம் கொடுக்க வேண்டும் என்பது குறித்து, மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.  இதற்கான ஆலோசனை கூட்டத்திற்கு, ஒருமுறை கூட ரோஹித்தை அழைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் முடிந்த பிறகுதான் ரோஹித் சர்மாவுக்கு இந்த தகவல் தெரிய வந்துள்ளது. இதனால், அவர் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

வங்கதேச டெஸ்ட் தொடர் முடிந்தப் பிறகு, ஊதிய நிர்ணயம் குறித்த மீட்டிங்கை மும்பை இந்தியன்ஸ் வைத்திருக்கலாம். ஆனால், ஹர்திக் பாண்டியாவை மட்டும் கூப்பிட்டு, இந்த ஆலோசனையை மும்பை நிர்வாகம் நடத்தி முடித்துள்ளது. இதனால், ரோஹித் சர்மாவின் ரசிகர்கள் கடும் கோபம் அடைந்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

 ஈஷா மையத்தில் விசாரணை : உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்த உச்சநீதிமன்றம்!

”ஈரானின் அணுசக்தி நிலையங்களை இஸ்ரேல் தாக்கக்கூடாது” : ஜோ பைடன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share