மும்பை சிறுமி ஆசையாக வைத்த கோரிக்கை: நிறைவேற்றிய ஸ்டாலின்

Published On:

| By Jegadeesh

Mumbai girl's wish Stalin fulfilled

மும்பையில் தன்னை சந்திக்க விரும்பிய பிரனுஷ்கா என்ற மாணவியின் விருப்பத்தை நிறைவேற்றியதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

‘நான் உங்கள் பெரிய ரசிகை..’ மும்பை வரும் உங்களை சந்திக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமூக வலைதளம் வாயிலாக மும்பை சிறுமி பிரனுஷ்கா கோரிக்கை வைத்திருந்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில், பிரனுஷ்காவின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, அவரை தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு குடும்பத்துடன் அழைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று உரையாடினார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று (செப்டம்பர் 1) வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மும்பையில்‌, என்னை சந்திக்க விரும்பிய அறிவார்ந்த இரக்கப்‌ பண்பு கொண்ட பிரனுஷ்கா என்ற மாணவியின்‌ விருப்பத்தை நான்‌ நிறைவேற்றினேன்‌.

மணிப்பூரில்‌ நடந்த வன்முறை இவரைப்‌ போன்ற ஒரு பள்ளி மாணவியைக்கூட எவ்வாறு பாதித்துள்ளது என்பதைப்‌ பார்க்கும்போது எனக்கு வேதனையாக இருக்கிறது.

ADVERTISEMENT

அதிகாரத்தில்‌ இருப்பவர்கள்‌ அமைதி மற்றும்‌ நல்லிணக்கத்தை நிலைநிறுத்த உழைக்க வேண்டும்‌ என்பதற்கு இது ஒரு தெளிவான நினைவூட்டலாகும்‌. ஐஏஎஸ்‌ அதிகாரியாக வேண்டும்‌ என்ற பிரனுஷ்காவின்‌ கனவு நனவாக வாழ்த்துகிறேன்‌.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

சீமானுக்கு சம்மன்!

’இந்தியா’ கூட்டணியின் இணை ஒருங்கிணைப்பாளர் யாரு?: அப்டேட் குமாரு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share