இந்த வீக் எண்டில் என்ன செய்யலாம் என்று நினைப்பவர்கள், எண்ணெய் இல்லாத இந்த மல்டி தால் கிரேவி செய்து சாப்பிடலாம். இதை பூரி, சப்பாத்தி, பரோட்டாவோடு சாப்பிட… சுவை அசத்தலாக இருக்கும். Multi Grain Gravy
என்ன தேவை?
துவரம்பருப்பு – 150 கிராம்
கடலைப்பருப்பு – 100 கிராம்
பாசிப்பருப்பு – 50 கிராம்
தேங்காய் – கால் கப் (அரைத்தது)
சின்ன வெங்காயம் – 150 கிராம் (நறுக்கியது)
தக்காளி – 2 (நறுக்கியது)
கீறிய பச்சை மிளகாய் – 4
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
குழம்பு மிளகாய்ப்பொடி – 2 டீஸ்பூன்
கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
மூன்று பருப்புகளையும் சுத்தம் செய்து, கழுவி வேக வைக்கவும். அரை வேக்காடு வந்ததும், கொத்தமல்லி தவிர மீதமுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து, தேவையான தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். கலவை நன்கு வெந்தபின் உப்பு சரிபார்த்து இறக்கி, கொத்தமல்லி தூவி கிளறி பரிமாறவும். Multi Grain Gravy