கோடைக்கேற்ற உணவுகளில் கீரைகளுக்கு முக்கிய இடம் உண்டு. அதிலும் முளைக்கீரையில் வைட்டமின்கள், தாது உப்புக்கள்… குறிப்பாக, சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்துகள் அதிக அளவில் உள்ளன. 85.7 சதவிகிதம் நீர்ச்சத்து நிறைந்த மூளைக்கீரை சேர்த்து இந்த ஊத்தப்பம் செய்து வீட்டிலுள்ளவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
என்ன தேவை?
தோசை மாவு – 2 கப்
முளைக்கீரை – ஒரு கட்டு (சுத்தம் செய்து, பொடியாக நறுக்கவும்)
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – அரை கப்
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்)
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
தோசை மாவுடன் கீரை, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்துக் கலக்கவும். அடுப்பில் தோசைக் கல்லை வைத்து சூடாக்கி, மாவை சற்று கனமான ஊத்தப்பமாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு திருப்பிப் போட்டு எடுக்கவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…