கிச்சன் கீர்த்தனா: முளைகட்டிய பயறு சோயா கிரேவி

Published On:

| By Monisha

Mulaikattiya Payaru Soya Gravy Recipe Kitchen Keerthana

சப்பாத்தி, பரோட்டா வகைகளுக்கு வீக் எண்ட் ஸ்பெஷலாக என்ன செய்யலாம் என்று யோசிப்பவர்களுக்கு இந்த முளைகட்டிய பயறு சோயா கிரேவி ரெசிப்பி உதவும். புரதச்சத்து நிறைந்த உணவு இது. இட்லி, தோசைக்கும் தொட்டுக்கொள்ளலாம்.

என்ன தேவை?

முளை கட்டிய பாசிப் பயறு – அரை கப்
மிகச் சிறிய சோயா உருண்டைகள் – கால் கப்
இஞ்சி- பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
கொத்தமல்லி – சிறிதளவு
வெங்காயம் – 2
தக்காளி – ஒன்று
எண்ணெய் – அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
மிளகு, சீரகம் – அரை டீஸ்பூன்
மிளகாய் – 3
மஞ்சள்தூள் – சிட்டிகை
உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

பயறைத் தனியாக வேகவிடவும். சோயாவை கொதிக்கும் நீரில் 5 நிமிடங்கள் ஊறவைத்துக் கழுவவும். எண்ணெயில் மிளகு, சீரகம் தாளித்து, அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பிறகு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். வெங்காயத்தைத் தனியாக வதக்கவும். மிளகு, சீரகக் கலவையை அரைத்து, அதில் வதக்கிய வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி சேர்த்து ஓரளவுக்கு அரைக்கவும். வெந்த பயறில் சோயா, அரைத்த விழுது, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: பொன்னாங்கண்ணி குழம்பு

கிச்சன் கீர்த்தனா: ஓட்ஸ் கட்லெட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share