பாமக இளைஞர் சங்க தலைவர் பதவியில் இருந்து முகுந்தன் விலகல்!

Published On:

| By Selvam

mukundan relieved from pmk youth wing secretary

கடந்த ஆண்டு புதுச்சேரியில் நடந்த பாமக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் இளைஞரணி தலைவராக முகுந்தனை பாமக நிறுவனர் ராமதாஸ் நியமித்தார். இதற்கு பாமக தலைவர் அன்புமணி கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார். mukundan relieved from pmk youth wing secretary

இந்தநிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், “பாமக கவுரவ தலைவர் ஜி.கே.மணியின் மகன் தமிழ்குமரன், முகுந்தன் உள்ளிட்டோரை கட்சி பொறுப்பில் நியமிப்பதை அன்புமணி விரும்பவில்லை. இதுபோன்று அவர் கட்சியின் வளர்ச்சி பணிகளுக்கு தடையாக இருக்கிறார்” என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT

இந்தநிலையில், பாமக இளைஞர் சங்க தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக முகுந்தன் பரசுராமன் இன்று (மே 29) தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள விலகல் கடிதத்தில், “பாமகவின் இளைஞரணியான பாட்டாளி இளைஞர் சங்கத்தின் தலைவராக கடந்த ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி நான் நியமிக்கப்பட்டேன்.

ADVERTISEMENT

சொந்த காரணங்களுக்காக அந்தப் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன். ராமதாஸ் தான் என்றென்றும் எனது குலதெய்வம். அன்புமணி இராமதாஸ் எங்கள் எதிர்காலம் என்ற உணர்வுடன் தொடர்ந்து கட்சிப் பணியாற்றுவேன் என்று உறுதியளிக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். mukundan relieved from pmk youth wing secretary

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share