கொல்லம் எம்.எல்.ஏ முகேஷ்க்கு முட்டு கொடுக்கும் பினராயி விஜயன்… கைதுக்கு தடை விதித்த நீதிமன்றம்!

Published On:

| By Kumaresan M

பாலியல் புகாருக்குள்ளான நடிகர் முகேஷ்க்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி துணை நிற்க முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது,.

மலையாள நடிகர் முகேஷ் மீது பல நடிகைகள் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, எர்ணாகுளம் மாராடு காவல் நிலையத்தில் ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இதையடுத்து, கொல்லம் தொகுதி எம்.எல்.ஏவாகவுள்ள நடிகர் முகேஷ் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென போர்க்கொடி எழுந்துள்ளது. முகேஷ் சார்ந்த மார்க்சிஸ்ட் கட்சியும் நடவடிக்கை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட நடிகை தன்னை பிளாக்மெயில் செய்ததாக முகேஷ் விளக்கமளித்தார். தொடர்ந்து, அந்த ஆதாரங்களை சமர்ப்பிக்கும்படி கேரள முதல்வர் பினராயி விஜயன் கேட்டுக் கொண்டார். இதனால், பினராயி விஜயனை சந்தித்த முகேஷ் தன்னிடம் இருந்த வாட்சப் சாட்டிங் உள்ளிட்ட ஆதாரங்களை ஒப்படைத்ததாக தெரிகிறது. இந்த விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கட்சி முகேஷ்க்கு ஆதரவான முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

அவரின் எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்ய உத்தரவிடவில்லை. அதோடு, மார்க்சிஸ்ட் கட்சியின் நெருங்கிய தோழமை கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, முகேஷின் எம்.எல். ஏ பதவியை பறிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் மார்க்சிஸ்ட் கட்சி உதாசீனப்படுத்திவிட்டது.

இதற்கிடையே, தன்னை கைது செய்ய கூடாது என்று எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தில் நடிகர் முகேஷ் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீது இன்று நடந்த விசாரணையில் முகேஷை 5 நாள்கள் வரை கைது செய்யக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வரும் செப்டம்பர் 3 ஆம் தேதி அவரின் முன்ஜாமீன் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்…. 

எம்.குமரேசன்

சே… இவர்கள் எவ்வளவு கோழைகள்! மோகன்லால் பற்றி நடிகை பார்வதி

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி….எத்தனை நாள் நீடிக்கும்?

 

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share