வளர்ப்பு நாய்களுடன் விளையாடிய தோனி

Published On:

| By Selvam

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனி தனது வீட்டில் உள்ள நாய்களுடன் விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

2002-ஆம் ஆண்டு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் தோனி விளையாட துவங்கினார். 2004-ஆம் ஆண்டு முதன் முதலாக ஒருநாள் போட்டியில் தோனி களமிறங்கினார். இதனை தொடர்ந்து டி20, ஒரு நாள், டெஸ்ட் என மூன்று தொடர்களிலும் தோனி கேப்டனாக இருந்தார். 2011 உலக கோப்பை, 2013 ஐசிசி சாம்பியன், 2010, 2016 ஆசிய கோப்பைகளை தோனி தலைமையிலான இந்திய அணி வென்றுள்ளது.

ADVERTISEMENT
ms dhoni daughter ziva fun pets

2010-ஆம் ஆண்டு முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் தோனி ரசிகர்களால் தல என்று அன்போடு அழைக்கப்படுகிறார்.

கடந்த மாதம் நடைபெற்று முடிந்த ஐபிஎல் இறுதி போட்டியில் குஜராத் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது. ஐபிஎல் சீசன் முழுவதும் மூட்டு வலியுடன் ஆடிய தோனி, போட்டி முடிந்ததும் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

ADVERTISEMENT

தற்போது தோனி தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். அந்தவகையில் தோனி தனது மகள் ஜிவாவுடன் அவர்கள் வீட்டிலுள்ள நாய்களுடன் விளையாடும் வீடியோவை தோனியின் மனைவி சாக்‌ஷி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ms dhoni daughter ziva fun pets

அந்த வீடியோவில் தனது கையில் உள்ள பந்தை தோனி வீசுகிறார். பந்தை எதிர்பார்த்து காத்திருக்கும் நாய்கள் துரத்தி சென்று கவ்வி கொண்டு மீண்டும் தோனியிடம் வந்து கொடுக்கிறது. மேலும் தோனி வீசும் பந்தை தங்களது வாயால் கவ்வி பிடிக்கிறது.

ADVERTISEMENT

தோனி தனது வீட்டில் உள்ள வளர்ப்பு நாய்களுடன் ரிலாக்ஸ் செய்யும் இந்த வீடியோ இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

செல்வம்

செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை: விமர்சனங்களுக்கு மா.சுப்பிரமணியன் பதிலடி!

ஹெலிகாப்டர் சகோதரர்களிடம் லஞ்சம்: காவல் ஆய்வாளர், எஸ்.ஐ மீது வழக்கு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share