தொடர் தோல்விகளை சந்தித்து வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக தோனி நியமிக்கப்பட்டுள்ளார். ms dhoni become new captain of csk
கடந்த மாதம் தொடங்கிய ஐபிஎல் தொடரில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளிட்ட அணிகள் அடுத்தடுத்து தோல்விகளை தழுவி வருகின்றன.
இதனால் அந்த அணியின் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக இதுவரை நடந்த 5 லீக் போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது ருதுராஜ் தலைமையிலான சிஎஸ்கே அணி.
இந்த நிலையில் முழங்கையில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக ருதுராஜ் கெய்க்வாட் நடப்பு தொடரில் இருந்து விலகுவதாகவும், நாளை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டி முதல் தோனியே மீண்டும் கேப்டனாக செயல்படுவார் என்றும் அணி நிர்வாகம் தற்போது அறிவித்துள்ளது.