எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பொறுப்பாளராக நியமனம்… என்ன காரணம்?

Published On:

| By Selvam

mrk panneerselvam appointed zonal incharge

வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக திமுகவில் ஏழு மண்டலங்கள் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒவ்வொரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டதை முதன்முதலாக மின்னம்பலத்தில் செய்தியாக வெளியிட்டிருந்தோம். mrk panneerselvam appointed zonal incharge

அதன்படி, அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அர.சக்கரபாணி, எம்பிக்கள் ஆ.ராசா, கனிமொழி மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் ஒவ்வொரு மண்டலத்திலும் அந்தந்த மண்டல பொறுப்பாளர்கள் ஆய்வு கூட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில், 8-ஆவது பொறுப்பாளராக வேளாண்துறை அமைச்சரும் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்கள் இவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மண்டல பொறுப்பாளர்கள் பட்டியலில் வன்னியர் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்பதற்காக எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் சேர்க்கப்பட்டுள்ளார் என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில். mrk panneerselvam appointed zonal incharge

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share