மோட்டோரோலா நிறுவனத்தின் ‘மோட்டோ ஜி54 5ஜி’ ஸ்மார்ட்போன் இன்று (செப்டம்பர் 6) இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ளது.
அதன்படி, இந்த புதிய மோட்டோ ஜி54 5ஜி (Moto G54 5G) போன் பிரபல Online store நிறுவனமான பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகிறது.
இந்நிலையில், இந்த Moto G54 5G போன் குறித்த விவரங்களை பார்ப்போம்:
6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளியாகும்.
1080 x 2400 பிக்சல்ஸ், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate), 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போனின் டிஸ்பிளே.
மோட்டோ ஜி54 5ஜி ஸ்மார்ட்போனில் 6000எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் உள்ளது.
அதேநேரம் விரைவாகவும் இந்த போனை சார்ஜ் செய்து கொள்ளும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
8ஜிபி ரேம் +128ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும். மேலும், கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது.
ஆக்டோ-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7020 சிப் வசதியைக் கொண்டுள்ளது மோட்டோ ஜி54 5ஜி ஸ்மார்ட்போன்.
குறிப்பாக கேமிங் வசதிகளுக்குத் தகுந்தபடி சிறந்த மென்பொருள் அமைப்பு இதில் உள்ளது. அதேபோல் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது.
மோட்டோ ஜி54 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டு. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் துல்லியமான வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்க முடியும்.
மேலும், செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது.
பவர் பட்டன் (power button) மற்றும் வால்யூம் ராக்கர்ஸ் (volume rockers) இந்த மோட்டோ ஜி54 5ஜி ஸ்மார்ட்போனின் வலது பக்கத்தில் உள்ளது.
அதேபோல் டால்பி அட்மோஸ்(Dolby Atmos) மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆதரவைக் கொண்டுள்ளது.
5ஜி, 4ஜி வோல்ட்இ, புளூடூத் 5.3, வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டு வெளிவரும் மோட்டோ ஜி54 5ஜி. அம்ப்ரோசியா (Ambrosia), பாலட் ப்ளூ (Ballad Blue), கரோனெட் ப்ளூ (Coronet Blue) மற்றும் அவுட்டர் ஸ்பேஸ் (Outer Space) நிறங்களில் இந்த மோட்டோ ஜி54 5ஜி போன் வெளிவரும். இது இந்தியாவில் 23,999 ரூபாய்க்கு விற்பனைக்கு வருகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
ஆயுத ஒப்பந்தம்: புதினை சந்திக்கும் கிம் ஜாங் உன்!
“வாழ்த்தினாலும், வறுத்தாலும்…”: இயக்குநர் ஹெச்.வினோத் குறித்து வைரல் பதிவு!