உலகமே உள்ளங்கையில அப்படினு சொல்றதோட உண்மையான அர்த்தம் நம்ம செல்போன்தான். அந்த அளவுக்கு செல்போன் பயனாளர்களோட எண்ணிக்கை கணிசமா உயர்ந்துட்டே வருது.
பேசுவதற்காக மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்ட செல்போன்கள் தற்போது இன்டர்நெட், மேசேஜ், வீடியோ கால், மெயில், வாட்சப் என சொல்லிக் கொண்டே போகும் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது.
எண்ணற்ற செல்போன் வகைகள் இருந்தாலும், நல்ல பீச்சர்கள் கொண்ட போன்களின் விலை சற்று கூடுதலாகத்தான் இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.
இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மோட்டோரோலா ஒரு சர்ப்ரைஸ் ஓட வந்து இருக்கு, ஏற்கனவே அறிமுகப்படுத்தி இருந்த மோடோரோலா e13 வகை செல்போன்ல இன்னும் சில அசத்தலான அப்டேட்கள கொடுத்து ப்ளிப்கார்ட் தளத்துல விற்பனைக்கு விட்டு இருக்காங்க.

மோட்டோரோலா e13 செல்போன், 2 மற்றும் 4 GB ரேம் என இரண்டு வகையாக விற்பனையில் இருக்கிறது, தற்போது 8 GB ரேம் மற்றும் 128 GB ஸ்டோரேஜ் என அப்டேட் செய்து வாடிக்கையாளர்களை அசர வைத்துள்ளது.
இந்த செல்போனை ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் ரூ.8,999க்கு ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனையை தொடங்கி இருக்கிறது மோட்டோரோலா, இதைப்பற்றி மேலும் தகவல்களை பார்க்கலாம்:
நிறம்: காஸ்மிக் பிளாக், அரோரா க்ரீன், க்ரீமீ ஓயிட்
ரேம்: 8 GB
ஸ்டோரேஜ்: 128 GB
பேட்டரி: 5000 mAh
ரியர் கேமெரா: 13 MP
ப்ரண்ட் கேமெரா: 5 MP
டிஸ்ப்ளே: 6.5 இன்ச்
எடை: 180 கிராம்
ஓஎஸ்: ஆன்ட்ராய்டு 13
ஆன்லைனில் இந்த மோட்டோரோலா e13 செல்போன் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டுமே கிடைக்கிறது, மாதத்தவணை 1500 ரூபாயில் இருந்து தொடங்குகிறது.
மக்களை மகிழ்விக்கும் வகையில் வெளிவந்துள்ள மோட்டோரோலாவின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கதாகவே உள்ளது.
பவித்ரா பலராமன்
விழுப்புரம் டூ நிலவு பயணம் : யார் இந்த வீரமுத்துவேல்?
செஸ் உலகக்கோப்பை: எப்படி இருக்கும் இன்றைய ’டை பிரேக்கர்’ ஆட்டம்?
