ஐபிஎல் தொடரின் 17 -வது சீசன் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இன்றிரவு (மார்ச் 22) 8 மணிக்கு தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன.
இதற்கிடையில் இதுவரை நடந்த ஐபிஎல் தொடர்களில் அதிக வெற்றிகளைப் பெற்ற கேப்டன் யார்? என்னும் விவாதம் சமூக வலைதளங்களில் களைகட்டியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் கடும் சண்டையினை ஏற்படுத்தி இருக்கும் இந்த கேள்விக்கான பதிலை இங்கே நாம் பார்க்கலாம்.

மஹேந்திர சிங் தோனி
இதுவரை நடந்த மொத்த கிரிக்கெட் தொடர்களையும் ஒப்பிடும் போது மஞ்சள் சிங்க கூட்டத்துக்கு முன்னால், கேப்டன் தோனி சுமார் 133 வெற்றிகளை பெற்று முதலிடத்தில் உள்ளார்.

ரோஹித் சர்மா
மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா 87 வெற்றிகளுடன், இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

கவுதம் கம்பீர்
இவருக்கு அடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் கெளதம் கம்பீர் 71 வெற்றிகளுடன், மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.

இந்த பட்டியலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டனும், ரசிகர்களால் ‘கிங்’ என புகழப்படுபவருமான விராட் கோலி 66 வெற்றிகளுடன் கடைசி இடத்தினை பிடித்துள்ளார்.
அதிக வெற்றிகள் மட்டுமின்றி ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரிலும், 1௦௦ வெற்றிகளை பெற்ற ஒரே கேப்டனாக சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-மாணவ நிருபர் கவின்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அமைச்சர் எ.வ. வேலு காரில் சோதனை!
Gopura Vasalile: கார்த்திக் – பானுப்ரியாவின் ‘கல்ட் கிளாசிக்’ திரைப்படம்!
