விஞ்ஞான உலகம் தற்போது பல்வேறு வளர்ச்சிகளைக் கண்டு வருகிறது. இணையம் இன்றியமையாததாக மாறி வருகிறது. இந்நிலையில் உலக அளவில் அதிக யூட்யூப் சந்தாதாரர்களை கொண்ட பியூடிபை தனது ஓய்வை அறிவித்தார். பியூடிபை (pewdiepie) என்று அறியப்பட்டவர் பெலிக்ஸ் அர்விட் கஜெல்பெர்க். இவர் உலகின் அதிக வருமானம் ஈட்டிய யூட்யூபர் என்று அழைக்கப்பட்டவர். உலக அளவில் அதிக அளவு யூட்யூப் சந்தாதாரர்களை கொண்ட 30 வயதான பியூடிபை, வீடியோ கேம் வர்ணனையாளராக வலைதள பதிவுகளில் அதிக அளவு அறியப்பட்டவர்.
இவர் அக்டோபர் மாதம் 24ஆம் தேதி 1989 ஆம் ஆண்டு சுவீடனில் கோட்டன் பெர்க்க்கில் பிறந்தார். இவர் சால்மேர்ஸ் பல்கலைகழகத்தில் தொழில்துறை பொருளியல் மற்றும் தொழில்நுட்ப மேலாண்மையில் பட்டம் படித்து வந்தார். 2010 ஆம் ஆண்டு பல்கலைக்கழகப் படிப்பின் போதே, ‘பியூடிபை’ என்ற பெயரில் யூட்யூப் சேனலை தொடங்கினார். பிறகு படிப்பில் ஆர்வம் இல்லாத பியூடிபை சால்மேர்ஸ் பல்கலைகழகத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். பிறகு முழுவதுமாக யூட்யூப் கன்டென்ட் உருவாக்கத்தில் மிகுந்த கவனம் செலுத்தினார். பின்னாளில் அவருக்கு யூட்யூபில் ஆதரவு அதிகரிக்க 2013 ஆம் ஆண்டு அதிகமான சந்தாதாரர்களைக் கொண்டவராக உருவெடுத்தார். பிறகு 2013 முதல் 2018 வரை மேலும் அதிகமாக 60 மில்லியன் சந்தாதாரர்களை கொண்டவராக உருவெடுத்தார். தற்போது 102 மில்லியன் சந்தாதாரர்களை கொண்டவராக மாறியுள்ளார் பியூடிபை.
நான் அடுத்த வருடம் எடுக்க இருக்கும் ஓய்விற்காக என் மனதை தயார்படுத்தி கொள்கிறேன். மேலும் தற்போது நான் மிகவும் சோர்வாக உணர்கிறேன். ஓய்விற்கான காரணத்தை முன்கூட்டியே சொல்ல விரும்பினேன்” என்று வீடியோ மூலம் பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் இந்தவாரம் வெளியிட்ட வீடியோவில் பியூடிபை கூறுகையில்,” நான் இடையில் சென்று திரும்ப வர விரும்பவில்லை. கடந்த 10 வருடங்களாக யூட்யூபில் முழுமையான ஆர்வத்துடன் செயல்பட்டேன். தற்போது நான் முழுமையான ஒய்வு எடுக்கப் போகிறேன். நான் வெளியிட்டுள்ள இந்த வீடியோ தான் எனது கடைசி வீடியோ” என்று 17 நிமிட வீடியோவில் பேசியிருக்கிறார்.
,”
