அல்லு அர்ஜூன் படத்திற்கு இவ்வளவு எதிர்ப்பார்ப்பா?… அப்போ தமிழ் படங்கள்?

Published On:

| By christopher

Most Anticipated Indian Movies of 2024

2024 ஆம் ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்திய படங்களின் பட்டியலை ஐ.எம்.டி.பி வலைத்தளம் சமீபத்தில் வெளியிட்டது. அந்த பட்டியலில் முதல் 20 இடங்களில் பல தென்னிந்திய படங்கள் இடம்பிடித்துள்ளது.

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் ‘புஷ்பா 2’ திரைப்படம் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. இதைத்தொடர்ந்து இயக்குனர் நாக அஸ்வின் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ’கல்கி’ படம் 5 வது இடத்தை பிடித்துள்ளது. இதை அடுத்து கன்னட ரோரிங் ஸ்டார் ஶ்ரீ முரளி நடித்துள்ள ’பகீரா’ படம் 6 வது இடத்தையும், தெலுங்கு இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கியுள்ள ’ஹனுமான்’ படம் 7 வது இடத்தையும் பிடித்து உள்ளது. இதைத்தொடர்ந்து சூர்யாவின் ’கங்குவா’ படம் ஒன்பதாவது இடத்திலும், ஜூனியர் என்டிஆரின் ’தேவரா’ பார்ட் 1 படம் பத்தாவது இடத்திலும் இருக்கிறது.

இதனை தொடர்ந்து, மகேஷ் பாபுவின் ’குண்டூர் காரம்’ படம் 12 வது இடத்திலும், மோகன்லால் நடித்துள்ள ’மலைக்கோட்டை வாலிபன்’ படம் 13-வது இடத்திலும், விஜய் சேதுபதி – கத்ரீனா கைஃப் இணைந்து நடித்துள்ள ’மெரி கிறிஸ்துமஸ்’ படம் 14வது இடத்திலும், தனுஷின் ’கேப்டன் மில்லர்’ படம் 15வது இடத்திலும், விக்ரமின் ’தங்கலான்’ படம் 16வது இடத்திலும், ஷங்கர்- கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் 17வது இடத்திலும் இருக்கின்றது.

– கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

IND vs AFG: இந்தியா அபார வெற்றி.. ரோகித் சர்மா புதிய சாதனை!

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறையில் பணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share