ADVERTISEMENT

MONTHA CYCLONE: வங்க கடலில் ‘மோன்தா’ புயல்.. கரையை கடப்பது எப்போது? 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்

Published On:

| By Mathi

Montha Cyclone Update

வங்க கடலில் உருவாகும் மோன்தா (மோந்தா Montha) புயல் நாளை மறுநாள் அக்டோபர் 28-ந் தேதி சூறாவளிப் புயலாக ஆந்திராவில் கரையைக் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மைய அறிக்கையில், தென்கிழக்கு வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவியது. இந்த புயல் சின்னம் மேலும் வலுவடைந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது.

ADVERTISEMENT

இந்த புயல் சின்னம் இன்று அக்டோபர் 26-ந் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் நாளை அக்டோபர் 27-ந் தேதி தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடலில் மோன்தா புயலாகவும் வலுவடையும்.

இம்மோன்தா புயல், வடமேற்கு திசையில் நகர்ந்து அக்டோபர் 28-ல் தீவிர புயலாக உருமாறும்.

ADVERTISEMENT

மோன்தா புயலானது, ஆந்திராவின் மசூலிப்பட்டினம்- கலிங்கப்பட்டினத்துக்கு இடையே காக்கிநாடாவுக்கு அருகில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மோன்தா புயல் கரையைக் கடக்கும் போது மணிக்கு 110 கிமீ வேகத்தில் தரைக்காற்று வீசக் கூடும்.

மோன்தா புயல் காரணமாக தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

திருவள்ளூர்
சென்னை
செங்கல்பட்டு
காஞ்சிபுரம்
விழுப்புரம்

ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக் கூடும்.

ராணிப்பேட்டை
திருவள்ளூர்
சென்னை
ஆகிய மாவட்டங்களில் நாளை மறுநாள் அக்டோபர் 27-ந் தேதி அதிக கனமழைக்கான வாய்ப்புள்ளதால் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share