மார்கழி மாதம் பிறப்பு: திருச்செந்தூர் கோயிலில் பூஜை நேரங்கள் மாற்றம்!

Published On:

| By Kalai

மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பூஜை நேரங்கள் மாற்றப்பட்டுள்ளது.   

தமிழ் மாதங்களில் தெய்வீக மாதமாக மார்கழி கருதப்படுகிறது. வழிப்பாட்டிற்கு உகந்த மாதமாக மார்கழி மாதம் உள்ளது.

மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு இன்று (16.12.2022 ) முதல் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் பூஜை காலங்கள் மாற்றப்படுகிறது.

16 ஆம் தேதியான இன்று முதல் அதிகாலை 3: 00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 3: 30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, அதிகாலை 4: 00  மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது.

தொடர்ந்து அதிகாலை  5: 00  மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, காலை 7: 30 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், 8: 45 மணிக்கு உச்சிகால தீபாராதனையும் நடக்கிறது.

பின்னர் மாலை 3: 30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 6 மணிக்கு ராக்கால அபிஷேகம், தீபாராதனை நடை பெற இருக்கிறது.

month of Margazhi Pooja timings change in Tiruchendur temple

இரவு 7: 30 மணிக்கு ஏகாந்த தீபாராதனை, இரவு 8: 00 மணிக்கு பள்ளியறை தீபாராதனையும் நடை பெறும். பின்னர் கோயில் நடை திருக்காப்பிடப்படும்.

இந்த பூஜை கால மாற்றம் ஜனவரி 14 ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

இதனை ஒட்டி இன்று அதிகாலை முதலே கோயில் நடை திறக்கப்பட்டதை அடுத்து பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கடலில் புனித நீராடி அதிகாலை முதல் நடைபெறும் பூஜைகளிலும் கலந்து கொண்டு பக்தியுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.  

மார்கழி மாதத்தில், இந்துக்கள் அனைவருமே அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி  வீடுகளில் வண்ண வண்ண கோலமிட்டு கோயில்களில் பஜனைகள் பாடி இறைவனை வழிபடுவது வழக்கம்.

இன்று மார்கழி முதல் தேதி என்பதால்  திருச்செந்தூரில் உள்ள அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் செய்யப்பட்டன.

மேலும் ஐயப்பனுக்கு மாலையிட்ட பக்தர்களும் இன்று அதிக அளவில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ஆண்களும் பெண்களும், சிறுவர் சிறுமியர்களும் அதிகாலையில் எழுந்து குளித்து புத்துணர்வுடன் கோவில்களுக்கு சென்று ஆண்டாள் மற்றும் மாணிக்கவாசகர் அருளிய திருப்பாவை பாடல்களையும், மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை பாடல்களையும் பக்தியுடன் சிவன் கோயில் ,கிருஷ்ணன் கோயில் ,விநாயகர் கோயில் போன்ற கோயில்களை சுற்றிய படி பஜனை பாடல்களை பாடி வழிபட்டு வருகின்றனர்.

கலை.ரா

அன்று பால், இன்று நெய்: விலை உயர்த்திய ஆவின்

டிஜிட்டல் திண்ணை: உதயநிதியின் ஆட்டம் ஆரம்பம்:  அதிர்ச்சியில் அதிகாரிகள்! 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share