இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20 தொடங்கி ஆகஸ்ட் 11 வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி இது குறித்து வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதிவில், “நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர், 2023 ஜூலை 20ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெறும்.
மழைக்கால கூட்டத்தொடரின் போது சட்டமன்ற வணிகம் மற்றும் பிற பொருட்கள் மீதான ஆக்கப்பூர்வமான விவாதங்களுக்கு பங்களிக்க அனைத்து தரப்பினரையும் வலியுறுத்துங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மே 28 ஆம் தேதி திறந்து வைக்கபட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இந்த ஆண்டு மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது. இந்த கூட்டத்தொடரில் பொது சிவில் சட்டம், டெல்லியில் மத்திய அரசின் அவசரச் சட்டம், மணிப்பூர் கலவரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோனிஷா
மழை வெள்ளமா?… கவலையே இல்ல: வைரலாகும் ஏஐ வாகனங்கள்!
“நம் நாடு 1947 இல் பிறந்தது என்பது ஜோக் – இது சனாதன நாடு” -ஆளுநர் ஆர்.என்.ரவி