மழையால் உயிர்சேதம் இருக்கக் கூடாது, அதற்கேற்றார் போல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். Deputy CM Udayanidhi Instruction
தென்கிழக்கு பருவமழை தொடங்கி நீலகிரி, கோவை மாவட்டங்களை புரட்டி எடுத்து வருகிறது. இதனால் அந்த மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சென்னை மாநகராட்சி பகுதிகளில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலத்தை எதிர்கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டுப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் தலைமை செயலகத்தில் நேற்று (மே 27) துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

இதில் அமைச்சர்கள், சென்னை மற்றும் அதையொட்டிய திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற – சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். Deputy CM Udayanidhi Instruction
கடந்தாண்டு பருவமழை நேரத்தின் போது, மழை காலத்தில் நீர் தேங்காமல் இருக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “கால்வாய்கள், கழிவுநீர் வடிகால்கள், ஏரி, குளங்கள் உள்ளிட்டவற்றை முறையாக தூர்வாரி முடிக்கவும், சாலைப்பணிகளை விரைந்து நிறைவு செய்ய வேண்டும், கனமழை நேரத்தில், வருவாய்த்துறை, சென்னை மாநகராட்சி, சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியம், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறை, மின்சாரத்துறை உள்ளிட்டவை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.
மழை நேரத்தில் உயிர்சேதம், பொருட்சேதம் ஏதுமில்லை என்ற நிலையை உருவாக்கிட அனைவரும் திட்டமிட்டு களப்பணி ஆற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
