குரங்கு அம்மை வழிகாட்டு நெறிமுறைகள் – இங்கிலாந்து அரசு!

Published On:

| By admin

ஆப்பிரிக்காவில் மட்டும் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை நோய் பாதிப்பானது தற்போது உலகம் எங்கும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த குரங்கு அம்மை நோயை கடந்த சில நாட்களுக்கு முன்புதான் உலக சுகாதார அமைப்பு அவசர நிலையாக அறிவித்தது.

இந்நிலையில் தற்போது இங்கிலாந்தில் இந்த நோய் பரவல் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து இங்கிலாந்து நோய் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

இதுவரை இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை நோயானது, ஆண்களுக்கு 96 சதவீதம் உடல் உறவு மூலம் பரவியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கிலாந்தில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களில் 79 சதவீதம் பேர் லண்டனில் வசிப்பவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 99 சதவீதம் பேர் ஆண்கள். 5 சதவீத பெண்கள் மட்டுமே இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து இங்கிலாந்து நோய் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்போது இங்கிலாந்தில் குரங்கு அம்மை நோயானது அதிகமாக பரவி வருகிறது. இந்நிலையில், நாம் அனைவரும் விழிப்புணர்வோடும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். இங்கிலாந்தில் இந்த நோய் பெரும்பாலும் உடலுறவு கொள்ளும்போதுதான் அதிகமாக பரவியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆகையால் அனைவரும் உடலுறவு கொள்ளும் போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.

ADVERTISEMENT

மேலும், “உங்களுக்கு குரங்கு அம்மை நோய் இருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தால், தயவுசெய்து உங்களை தனிமைப்படுத்தி கொள்ளுங்கள். குறிப்பாக பொதுநிகழ்வுகளுக்குச் செல்லவோ, நண்பர்களைச் சந்திக்கவோ அல்லது உடலுறவு கொள்ளவோ வேண்டாம். வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு பாதுகாப்பாக இருங்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share