கதை வேண்டாம்… காங்கிரஸ் போதும் : மோடி கிண்டல்!

Published On:

| By Kavi

Money Heist' fiction modi criticise Congress

Money Heist’ fiction modi criticise Congress

காங்கிரஸ் எம்.பி. தீரஜ் சாகு தொடர்புடைய இடங்களில் கட்டுக் கட்டாகப் பணம் எடுத்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை பிரதமர் மோடி கிண்டல் செய்துள்ளார்.

ஒடிசா மாநிலத்திலுள்ள பிரபல மதுபான உற்பத்தி நிறுவனமான பால்டியோ சாகு குழுமம் வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து இந்த நிறுவனம் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.

இந்த நிறுவனத்துடன் தொடர்புடையதாகக் கூறி ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. தீரஜ் சாகு தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

இங்கு கட்டு கட்டாக பணம் கைப்பற்றப்பட்டது ரூ.350 கோடிக்கு அதிகமான ரொக்கம் 170 மூட்டைகளில் கட்டி எடுத்து செல்லப்பட்டது.

காங்கிரஸ் எம்.பி.க்கு தொடர்புடைய இடங்களில் இவ்வளவு பணம் கைப்பற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து வரும் பாஜக, காங்கிரஸ் ஒரு ஊழல் கட்சி என்று விமர்சித்து வருகிறது.

தீரஜ் சாகு தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்திய போது பீரோக்களில் கட்டு கட்டாக பணம் இருக்கும் வீடியோ வெளியானது.

இந்த வீடியோவை பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தது. இதனை இன்று (டிசம்பர் 12) ஷேர் செய்துள்ள பிரதமர் மோடி,

“இந்தியாவில் 70 ஆண்டுகால பழமையான கொள்ளையடிக்கும் காங்கிரஸ் கட்சி இருக்கும் போது, பணம் கொள்ளையடிப்பது தொடர்பான மணி ஹெய்ஸ்ட்  புனை கதைகள் யாருக்குத் தேவைப்பட போகிறது” என்று கிண்டலாகப் பதிவு செய்துள்ளார்.

அதுபோன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் கிரன் ரிஜுஜு,

“காங்கிரசும் அதன் நண்பர்களும் ஊழல் நோயை பரப்பி வருகின்றனர், அதற்கு எதிராக ஒரு இயக்கம் அரசாங்கத்தால் மட்டுமல்ல, நாட்டின் மக்களாலும் தொடங்கப்பட வேண்டும்.

ஆர்.ஜே.டி., திமுக போன்ற காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகள் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் உள்ளன. ஊழலுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுப்பது தான் மோடியின் உத்தரவாதம்” என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

“அனிமல்” : 11 நாள் வசூலே இவ்வளவா?

பேரன்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி…. திரையுலக பிரபலங்கள் வாழ்த்து!

Money Heist’ fiction modi criticise Congress

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share