மலையாள நடிகர் சங்கமான ’அம்மா’ வில் தவறு நடப்பதற்கு அதன் தலைவராக இருந்த மோகன்லாலும் ஒரு விதத்தில் காரணமென்று நடிகர் பிருத்வியின் தாயார் மல்லிகா சுகுமாரன் கூறியுள்ளார்.
கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக மலையாள திரையுலகில் நடித்து வருபவர் மல்லிகா சுகுமாரன். மறைந்த மலையாள நடிகர் சுகுமாரனின் மனைவியும், மலையாள நடிகர்களான பிருத்விராஜ் சுகுமாரன் மற்றும் இந்திரஜித் சுகுமாரன் ஆகியோரின் தாயாரும் ஆவார். இவர் கேரள சினிமாத்துறையில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பற்றி இப்போது கருத்து தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி மீடியாக்களிடம் மல்லிகா சுகுமாறன் கூறுகையில, ” மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’-வின் முன்னாள் தலைவரான மோகன்லால், அங்கு நடக்கும் பிரச்சனைகளை நன்கு அறிந்தவர். அமைப்பில் நடக்கும் பிரச்சனைகள் , யார் யார் தவறு செய்கிறார்கள் என்பது பற்றி மோகன்லால் நன்கு அறிந்து கொண்டே அமைதியாக இருந்துள்ளார்.
சிலர் தங்கள் சொந்த பலன்களுக்காக ’அம்மா’ அமைப்பை பயன்படுத்தி கொண்டுள்ளனர். இதன் விளைவாக பல தகுதியானவர்களுக்கு வேண்டிய உதவி கிடைக்காமல் போய் விட்டது. கடந்த 2017 ஆம் ஆண்டு அந்த நடிகை தாக்கப்பட்டது 100% உண்மைதான். அந்த சம்பவம் நடந்து ஏழு வருடங்கள் ஆகியும் அரசு தெளிவான முடிவுகள் எதையும் அளிக்கவில்லை. எந்தவொரு தவறும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் . நடிக்க வாய்ப்பைப் பெற , நடிகைகள் ஐந்து அல்லது ஆறு முறை ஹோட்டல் அறைகளுக்குச் செல்ல வேண்டுமா?. இதுவெல்லாம் உச்சப்பட்சமாக நடக்கும் தவறுகள் ஆகும்” என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் மலையாள சினிமாவில் நடக்கும் பாலியல் கொடுமைகள் குறித்து ஹேமா அறிக்கை வெளியிடப்பட்டது. இதையடுத்து, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக நடிகர் முகேஷ் கைது செய்யப்பட்டார். பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான நடிகர் சித்திக் முன் ஜாமீன் பெற்றுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
”பாபர் மசூதி வழக்கில் தீர்வு கேட்டு கடவுளிடம் வேண்டினேன்” : சந்திரசூட் பேச்சு… காங்கிரஸ் கண்டனம்!
குழந்தை பிறந்த போது தொப்புள் கொடியை வெட்டிய இர்பான்… திருந்தாத வருந்தாத நிலை!