பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மீது மக்கள் அதிருப்தியை வெளிப்படுத்துவதாக India Today கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“Mood of the Nation” என்ற பெயரில் கடந்த பிப்ரவரி மாதம் India Today கருத்து கணிப்பை நடத்தியது. இதனைத் தொடர்ந்து இந்த ஆகஸ்ட் மாதமும் கருத்து கணிப்பை India Today நிறுவனம் நடத்தி முடிவுகளை ஒப்பீடு செய்து தெரிவித்துள்ளது.

பாஜகவுக்கு சவால் விடும் காங்கிரஸ்
2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் பாஜக தனித்து 281 இடங்களைப் பிடிக்கும்; எதிர்க்கட்சிகள் 184; காங்கிரஸ் 78 இடங்களைக் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்த ஆகஸ்ட் மாத கருத்து கணிப்பில் பாஜகவுக்கு 260 இடங்களும் எதிர்க்கட்சிகளுக்கு 186 இடங்களும் காங்கிரஸுக்கு 97 இடங்களும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோடி மீது அதிருப்தி
பிரதமர் நரேந்திர மோடியின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதாக பிப்ரவரி மாதம் கருத்து கணிப்பில் 62% பேர் தெரிவித்திருந்ந்தனர்; மோடியின் செயல்பாடுகள் மோசம் என 21% பேர் தெரிவித்திருந்தனர்.
தற்போதைய ஆகஸ்ட் மாத கருத்து கணிப்பில் மோடியின் செயல்பாடுகள் சிறப்பு என 58% பேர் மட்டுமே தெரிவித்துள்ளனர். மோடி அரசு செயல்பாடு மோசம் என 26% பேர் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.
மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் செயல்பாடு சிறப்பு என கடந்த பிப்ரவரியில் 62.1% பேர் தெரிவித்திருந்தனர். ஆனால் தற்போதைய ஆகஸ்ட் மாதம் 54.2% பேர் மட்டுமே, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் செயல்பாடு சிறப்பு என தெரிவித்துள்ளனர். மத்திய அரசு மீதான அதிருப்தி 8.6% அதிகரித்துள்ளது.
இந்தியா டுடே சி வோட்டர் நிறுவனமானது இந்த கருத்து கணிப்பை, ஜூலை 1-ந் தேதி முதல் ஆகஸ்ட் 14-ந் தேதி வரை மேற்கொண்டது.
| விவரம் | 2025 பிப்ரவரி கருத்துக்கணிப்பு | 2025 ஆகஸ்ட் கருத்துக்கணிப்பு |
|---|
| பாஜக (தனித்து) | 281 இடங்கள் | 260 இடங்கள் |
| காங்கிரஸ் | 78 இடங்கள் | 97 இடங்கள் |
| எதிர்க்கட்சிகள் (மொத்தம்) | 184 இடங்கள் | 186 இடங்கள் |
| மோடி செயல்பாடு – சிறப்பு என கூறியோர் | 62% | 58% |
| மோடி செயல்பாடு – மோசம் என கூறியோர் | 21% | 26% |
| தேஜகூ (NDA) செயல்பாடு – சிறப்பு | 62.1% | 54.2% |
