பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை!

Published On:

| By Monisha

பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அது தொடர்புடைய அமைப்புகளுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள பி.எஃப்.ஐ அலுவலகங்கள் மற்றும் அமைப்பிற்கு தொடர்புடைய முக்கிய நிர்வாகிகள் வீட்டில் அதிரடியாக என்.ஐ.ஏ மற்றும் மத்திய அமலாக்கத்துறை சோதனை நடத்தின.

ADVERTISEMENT

இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றபட்டதாக என்.ஐ.ஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் பி.எஃப்.ஐ அமைப்பு தீவிரவாத இயக்கத்திற்கு உதவுவதாகவும், இந்த அமைப்பிற்கு ஆட்களைச் சேர்ப்பதற்குப் பலரை மூளைச் சலவை செய்வதாகவும் மத்திய உள்துறை அமைச்சகத்தில் புகார்கள் அளிக்கப்பட்டன.

ADVERTISEMENT

சோதனையைத் தொடர்ந்து பி.எப்.ஐ அமைப்பை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் கைது செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. தமிழகத்திலும் கோவை, ஈரோடு, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவமும் நடைபெற்றன.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு குண்டு வீச்சில் தொடர்புடைய பலரைக் காவல் துறை தொடர்ந்து கைது செய்து வருகிறது.

ADVERTISEMENT

இந்நிலையில் பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அது தொடர்புடைய இயக்கங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இந்த இயக்கத்தின் மீதான தடை உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் அறிவித்துள்ளது.

மோனிஷா

பிஎஃப்ஐ அமைப்பை புரட்டியடிக்கும் என்.ஐ.ஏ: பின்னணி இது தான்!

டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க…

Photo of author
Monisha
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share