மோடியின் உரை… விஜய் புதுக் கட்சி: ஸ்டாலின் இன்ட்ரஸ்டிங் பதில்!

Published On:

| By Aara

ஸ்பெயின் நாட்டில் இருந்து இன்று (பிப்ரவரி 7) காலை சென்னை  திரும்பிய முதல்வர் ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
‘அப்போது அவரிடம்  “நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசியதைப் பார்த்தீர்களா?” என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “பார்த்தேன்… படிச்சேன்… ரசிச்சேன்…. சிரிச்சேன்… ஏன்னா பிஜேபிதான் எதிர்க்கட்சி மாதிரியும், காங்கிரஸ்தான் ஆளுங்கட்சி மாதிரியும் அவர் பேசிக்கிட்டிருக்காரு. அவர் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே ஏதோ எதிர்க்கட்சி மாதிரியே செயல்பட்டுக்கிட்டு காங்கிரசை அட்டாக் பண்ணி பேசிக்கிட்டிருக்காரு. இதுதான் புரியாத புதிரா இருக்கு” என்றார் ஸ்டாலின்.

அதே உரையில், பாஜக கூட்டணி 400 இடங்களை கைப்பற்றும் என்று பிரதமர் மோடி பேசியிருப்பது பற்றி கேட்டதற்கு,

“மொத்தம் 400 தானா… மொத்தம் 543 இடம் இருக்கு. அதையும் கைப்பத்துவோம்னு சொன்னாலும் ஆச்சரியம் இல்ல” என்று ஸ்டாலின் பதிலளிக்க உடன் இருந்த நிர்வாகிகள் எல்லாம் சிரித்தார்கள்.

நடிகர் விஜய்  புதிய அரசியல் கட்சியை தொடங்கியிருப்பது பற்றிய  கேள்விக்கு, “மக்களுக்கு தொண்டாற்ற யார் வந்தாலும் மகிழ்ச்சி அடைவேன்” என்று பதிலளித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

வேந்தன்

கூட்டணி கதவுகள் திறந்தே இருக்கின்றன : எடப்பாடிக்கு அமித் ஷா அழைப்பு!

சாதனைப் பயணம்: ஸ்பெயினில் இருந்து சென்னை திரும்பினார்  முதல்வர் ஸ்டாலின்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share