மாற்றுத்திறனாளி தொண்டருடன் பிரதமர் செல்ஃபி!

Published On:

| By Monisha

சென்னை வந்திருந்த பிரதமர் மோடி, மாற்றுத்திறனாளி கட்சி தொண்டருடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாட்டிற்கு நேற்று (ஏப்ரல் 8) வந்திருந்த பிரதமர் மோடி வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவையை தொடங்கி வைப்பது, சென்னை விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளைத் துவங்கி வைத்தார்.

ADVERTISEMENT

சென்னை வந்த அவரை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் நேரில் சென்று பிரதமரை வரவேற்றனர்.

மேலும் பிரதமர் செல்லும் இடமெங்கும் அவரை வரவேற்க தமிழ்நாடு பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது பல்லாவரத்தில் ஒரு மாற்றுத்திறனாளி பாஜக தொண்டருடன் பிரதமர் செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

ADVERTISEMENT

இது குறித்து பிரதமரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “ஒரு சிறப்பு செல்ஃபி…

சென்னையில் எஸ்.மணிகண்டனை சந்தித்தேன். அவர் ஈரோட்டை சேர்ந்த ஒரு பெருமைமிக்க கட்சிக்காரர். பூத் நிலை முகவராக இருக்கிறார்.

ADVERTISEMENT

அவர் ஒரு மாற்றுத்திறனாளி, சொந்தமாக கடை நடத்துகிறார், மேலும் ஊக்கமளிக்கும் அம்சம் என்னவென்றால் – அவர் தனது தினசரி லாபத்தில் கணிசமான பகுதியை பாஜகவுக்குக் கொடுக்கிறார்.

மணிகண்டன் போன்றவர்கள் இருக்கும் கட்சியில் இருப்பதைப் பெருமையாக உணர்கிறேன். அவரது வாழ்க்கைப் பயணம் மற்றும் நமது கட்சி, நமது சித்தாந்தத்தின் மீதான அவரது உறுதி அனைவரையும் ஊக்குவிக்கிறது. அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

தமிழ்நாட்டிற்கு வருகை தந்த பிரதமர் கட்சி தொண்டருடன் எடுத்து கொண்ட செல்ஃபி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மோனிஷா

ஆஸ்கர் தம்பதியை சந்தித்தார் பிரதமர் மோடி

விடிய விடிய காத்திருந்து… டிக்கெட் வாங்கிச் செல்லும் சி.எஸ்.கே ரசிகர்கள்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share