“கோடைக்காலத்தில் அனைவரும் தங்களது வீடுகள், மாடிகளில் பறவைகளுக்காக பானையில் நீர் வையுங்கள்” என்று பிரதமர் மோடி இன்று (மார்ச் 30) கோரிக்கை வைத்துள்ளார். Modi request citizens water
“கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானாவில் இன்று உகாதிப் பண்டிகை மிகவும் கோலாகலத்தோடு கொண்டாடப்பட்டு வருகின்றது. மகாராஷ்டிரத்தில் குடிபடுவா கொண்டாடப்படுகிறது.
பன்முகத்தன்மை நிறைந்த நமது தேசத்திலே, பல்வேறு மாநிலங்களிலும் அடுத்த சில நாட்களில் புத்தாண்டு விழாக்கள் கொண்டாடப்படும். மேலும் ஈத் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. அதாவது இந்த மாதம் முழுவதும் பண்டிகைகளுக்கான மாதம்.
திருநாட்களுக்கான மாதம். நான் நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்தப் பண்டிகைகளின் பொருட்டு பலப்பல வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன். நமது இந்தப் பண்டிகைகள் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டாலும், பாரதத்தின் வேற்றுமையில் எவ்வாறு ஒற்றுமை இழைந்தோடுகிறது என்பதைக் காண முடிகிறது. இந்த ஒற்றுமை உணர்வைத் தான் நாம் மேலும் மேலும் பலப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும்.
கோடைக்காலம் தொடங்கியவுடனேயே நகரம்தோறும், கிராமந்தோறும், நீரைச் சேமிக்கும் தயாரிப்புகள் தொடங்கி விடுகின்றன. பல மாநிலங்களில் நீர் சேகரிப்போடு தொடர்புடைய பணிகள், நீர் பாதுகாப்போடு தொடர்புடைய பணிகளுக்குப் புதிய வேகம் பிடித்திருக்கின்றன. கோடையில் முடிந்தால் உங்கள் வீட்டிற்கு முன்பாக பானையில் நீரைக் கண்டிப்பாக வைத்திருங்கள். வீட்டின் மாடியிலோ, முற்றத்திலோ பறவைகளுக்காக நீர் வையுங்கள். இந்தப் புண்ணிய கார்யம் உங்கள் மனதை எத்தனை வருடும் என்பதை நீங்களே உணரலாம்.
ஜலசக்தி அமைச்சகமும் பல்வேறு தன்னார்வ அமைப்புகளும் இந்த நோக்கில் பணியாற்றி வருகின்றார்கள்.
ஒவ்வோர் ஆண்டினைப் போலவே இந்த முறையும், கேட்ச் தி ரெயின், அதாவது மழை நீரைச் சேகரிப்போம் இயக்கத்திற்காக தயாரிப்புகள் செய்யப்பட்டு விட்டன. இந்த இயக்கமும் கூட அரசினுடையது அல்ல, சமூகத்தினுடையது, மக்களுடையது.
நீர் பாதுகாப்போடு அதிக அளவு மக்களை இணைப்பதற்காக நீர் சேகரிப்புக்கான மக்கள் பங்கெடுக்கும் இயக்கங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. நம்மிடத்திலே இருக்கும் இயற்கை ஆதாரங்களை எவ்வாறு அடுத்த தலைமுறையினரிடம், பாதுகாப்பாக கொண்டு சேர்ப்பது என்பது தான் முயற்சி.
மழைநீர்த் துளிகளைச் சேகரிப்பதன் மூலம் நாம் நிறைய நீரை வீணாகாமல் சேமிக்க முடியும். கடந்த சில ஆண்டுகளில் இந்த இயக்கத்தின்படி, தேசத்தின் பல பாகங்களில் நீர் பாதுகாப்பு தொடர்பான இதுவரை காணாத அளவு செயல்கள் நடந்திருக்கின்றன.
நான் உங்களுக்கு சுவாரசியமான ஒரு புள்ளிவிவரத்தை அளிக்கிறேன். கடந்த 7-8 ஆண்டுகளில் புதிதாக உருவாக்கப்பட்ட கண்மாய்கள் – குளங்கள் மற்றும் நீர் மறுசெறிவு அமைப்புகளால் 11 பில்லியன் க்யூபிக் மீட்டரை விட அதிக அளவு நீர் பாதுகாக்கப்பட்டிருக்கிறது” என்று மோடி தெரிவித்தார். Modi request citizens water