உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுகள் எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கான முன்மாதிரியாக இருப்பதாக பிரதமர் மோடி கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பிரதமர் மோடி தந்திரமாக எதிர்க்கட்சிகள் மீது உளவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்துவதாக தேர்தல் உத்தி வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் கருத்துக்கு பதிலளித்துள்ள பிரசாந்த் கிஷோர், “இந்தியாவுக்கான போர் 2024ல் நடத்தப்படும், எந்த மாநிலத் தேர்தலிலும் அல்ல. இது சாஹேபுக்கு (மோடி) தெரியும்!
ஆனாலும் மாநில தேர்தல் முடிவுகளை மையமாக வைத்து எதிர்க்கட்சிகளின் மீது தீர்க்கமான உளவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் புத்திசாலித்தனமான முயற்சி. பிரதமரின் இந்த தந்திரத்தில் யாரும் விழ வேண்டாம். இந்த தவறான அணுகுமுறையின் ஒரு பகுதியாக யாரும் இருக்க வேண்டாம்” என்று பிரசாந்த் கிஷோர் மார்ச் 12 ஆம் தேதி ட்விட் செய்துள்ளார்.
**வேந்தன்**
