ஸ்டாலின் பிறந்தநாள் : மோடி, கார்கே வாழ்த்து!

Published On:

| By christopher

Modi Kharge wished to mk Stalin's Birthday

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 1) தனது 71வது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில் அவருக்கு நாட்டின் முக்கிய தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நீண்ட, ஆரோக்கியமான வாழ்வை வாழ வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தனது வாழ்த்து செய்தியில், “தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.  நீங்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “அனைவரின் வாழ்க்கையில் மிகுந்த அன்பையும், நம்பிக்கையையும் தரும் முதல்வர் ஸ்டாலினுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். இந்த பிறந்தநாள் தங்களுக்கு அன்பும், வெற்றியும் நிறைந்த ஒரு அற்புதமான பயணமாக தொடருட்டும். நீண்ட ஆயுளுடன் நல்ல உடல்நலத்துடன் வாழ வாழ்த்துகிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

பொறுத்தது போதும்… எடப்பாடிக்கு அமித் ஷா இறுதி கெடு!

ரூ.8000 விலையில் 5ஜி ஸ்மாா்ட் போன்… பிரபல நிறுவனத்திடம் இருந்து கிடைத்த தகவல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share