100 நாள் வேலை திட்டத்தை மத்திய பாஜக அரசு அழிப்பதாக குற்றம்சாட்டி மதுராந்தகத்தில் நேற்று திடீரென காங்கிரஸ் கட்சியினர் ’மோடியே திரும்பிப் போ!’ முழக்கத்துடன் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இப்போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
100 நாள் வேலை திட்டத்தை மத்திய அரசு அழிக்கிறது என்பது காங்கிரஸின் குற்றச்சாட்டு. இதனால் தமிழகம் வரும் மோடிக்கு எதிராக போராட்டங்களை காங்கிரஸ் கட்சியினர் அறிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி வருகைக்கு எதிராக வீடுகள் மதுராந்தகத்தில் இன்று வீடுகள் தோறும் கறுப்பு கொடி ஏற்றும் போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சியின் தெலுங்கானா மாநில பொறுப்பாளரான முன்னாள் எம்.பி. விஸ்வநாதன் அறிவித்துள்ளார். மேலும் மதுராந்தகத்தில் நேற்று இரவு ”பிரதமர் மோடியே திரும்பிப் போ! “ முழக்கத்துடன் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்தப்பட்டது. இப்போராட்டத்தை நடத்திய காங்கிரஸ் முன்னாள் எம்.பி. விஸ்வநாதன் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கறுப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்துவோம் என மே 17 இயக்கம் அறிவித்துள்ளது.
