தமிழகத்தின் ராமேஸ்வரத்தில் இருந்து 17 கி.மீ தொலைவில் உள்ள கச்சத்தீவு இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கச்சத்தீவு அருகே மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதும் சிறைபிடிக்கப்படுவதும் தொடர்கதையாகியுள்ளது.
இதனால் கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று மீனவ சமுதாய மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். தமிழக அரசியல் களத்தில் கச்சத்தீவு தொடர்ந்து பேசுபொருளாகவே இருந்து வருகிறது.
இந்தநிலையில், இலங்கை வசம் உள்ள கச்சத்தீவு குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கேட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், “1974-ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் போதுமான ஆவணங்களை சமர்ப்பிக்காததால் கச்சத்தீவு இலங்கை வசம் சென்றது” என்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், “கச்சத்தீவை காங்கிரஸ் தாரை வார்த்து கொடுத்தது அம்பலமாகியுள்ளது. இது ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்துகிறது. காங்கிரஸை நாம் ஒருபோதும் நம்ப முடியாது என்று மீண்டும் மக்கள் உறுதியாக நம்புகின்றனர்.
இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் நலன்களை பலவீனப்படுத்த 75 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி உழைத்துக்கொண்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
IPL 2024: பஞ்சாபை பஞ்சு பஞ்சா பிச்சுப்போட்ட சின்ன பையன்… போட்டிபோட்டு தேடும் ரசிகர்கள்!
எம்.பி சீட் கிடைக்காமல் போக முயன்றவர்களுக்கு நன்றி: திருநாவுக்கரசர்
Comments are closed.