தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் சென்னையில் இன்று ஜனவரி 25-ந் தேதி மிதமான மழை பெய்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று ஜனவரி 24-ந் தேதி நள்ளிரவு முதல் மிதமான மழை பெய்தது. இதனால் சென்னையில் காலையில் குளிர்ந்த சூழல் நிலவியது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியே இந்த மழைக்குக் காரணம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று ஜனவரி 25-ந் தேதி செங்கல்பட்டு, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், ராமநாதபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் நாளை ஜனவரி 26-ந் தேதி இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜனவரி 27-ந் தேதி வறண்ட வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மழைக்காலம் முடிவுக்கு வரும் எனத் தெரிகிறது.
