ஒரே சின்னம்: மொபைல் பே நிறுவனத்துக்கு  இடைக்காலத் தடை!

Published On:

| By Minnambalam

வணிக சின்னம் பிரச்சினை தொடர்பாக போன் பே நிறுவனம் தொடர்ந்த வழக்கில், பணப் பரிவர்த்தனை சேவைகளை வழங்க மொபைல் பே நிறுவனத்துக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக போன் பே நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், தங்களுடைய நிறுவனத்தின் வணிகச் சின்னத்தைப் போல, மொபைல் பே நிறுவனத்தின் வணிகச் சின்னம் இடம்பெற்றிருக்கிறது.

ADVERTISEMENT

அதனால் மொபைல் பே நிறுவனத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல், மொபைல் பே செயலியின் லோகோவும் போன் பே செயலியின் லோகோவைப் போல் இருப்பதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இந்த மனுவை நீதிபதி சுந்தர் விசாரித்தார். இரு செயலிகளுடைய வணிக சின்னமும் லோகோவும் முழுமையாக ஒரே மாதிரியாக இல்லாவிட்டாலும் கூட, சாதாரண பொதுமக்களுடைய பார்வையில் அதைப் பார்க்கும்போது,

அவை இரண்டும் ஒரே தோற்றத்தில் இருப்பதற்கான முகாந்திரங்கள் இருக்கின்றன என்று கூறிய நீதிபதி அதனால்,

ADVERTISEMENT

மொபைல் பே நிறுவனம் பணப் பரிவர்த்தனை சேவைகளை மேற்கொள்ளக் கூடாது என்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.

மேலும் மொபைல் பே செயலியில் பணம் சேர்ப்பது உள்ளிட்ட பிற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று அனுமதித்த நீதிபதி,

இந்தச் செயலியை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து நீக்குவது தொடர்பான கோரிக்கை குறித்து பதிலளிக்குமாறு கூகுள் நிறுவனத்துக்கும் ஆப்பிள் நிறுவனத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைத்திருக்கிறார்.

-ராஜ்

டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!

கிச்சன் கீர்த்தனா – வரகு சீப்பு சீடை

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share