உலகளவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ’பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தின் முதல் பாகத்தின் டிரெய்லரை முதல்வர் ஸ்டாலின் செப்டம்பர் 6ம் தேதி வெளியிட உள்ளார்.
பொன்னியின் செல்வன் நாவலை மையப்படுத்தி இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை இரண்டு பாகங்களாக மிக பிரம்மாண்டமாக எடுத்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையில், ஜெயம் ரவி, கார்த்தி, ஜஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் உட்பட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இத்திரைப்படத்திற்கு உலகளவில் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
பொன்னியின் செல்வன் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ள நிலையில், பாடல் வெளியீட்டு விழா சென்னையில் செப்டம்பர் 6-ம் தேதியும், ஐதராபாத்தில் செப்டம்பர் 8-ம் தேதி பாடல் வெளியீட்டு விழா நடைபெறுகிறது.
டிரெய்லர் வெளியிடுகிறார் ஸ்டாலின்!
சென்னையில் நடைபெறும் பாடல் வெளியீட்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார். மேலும் அதில் கலந்து கொண்டு பொன்னியின் செல்வன் படத்தின் ட்ரெய்லரை வெளியிடுகிறார்.
அரசியல் கட்சி தலைவர்கள் பொதுவாக சினிமா விழாக்களில் கலந்து கொள்வதில்லை. எனினும் சோழர்களை மையமாக கொண்ட வரலாற்று படம் என்பதால் பொன்னியின் செல்வன் விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்கிறார் என்று கூறப்படுகிறது.
இந்த விழாவில் அவருடன் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் பங்கேற்க உள்ளனர்.
அதனை தொடர்ந்து ஐதராபாத்தில் செப்டம்பர் 8-ம் தேதி நடைபெறும் விழாவில் எஸ்.எஸ்.ராஜமௌலி அல்லது சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
