தொகுதி மறுவரையறை கூட்டம் : முதல் ஆளாக சென்னை வந்த தலைவர்… ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ!

Published On:

| By christopher

mkstalin welcome all leaders who are coming for JAC meeting

தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்க கேரள முதல்வர் பினராயி விஜயன் முதல் ஆளாக சென்னைக்கு நேற்று இரவு (மார்ச் 21) வருகை தந்தார்.

இதனையடுத்து அனைத்து தலைவர்களையும் வரவேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார். mkstalin welcome all leaders who are coming for JAC meeting

நாட்டில் நாடாளுமன்ற தொகுதிகளை மக்கள் தொகையின் அடிப்படையில் மறுவரையறை செய்ய மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. அப்படி நடந்தால் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென்மாநிலங்களின் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பின் பேரில் தொகுதி மறுவரையறை குறித்த கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி கிராண்ட் சோழா ஹோட்டலில் நாளை நடைபெற உள்ளது.

சென்னை வந்த பினராயி விஜயன்

இதில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் அழைப்பை ஏற்று முதல் தலைவராக கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று இரவு சென்னைக்கு வருகை தந்தார். அவரை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.

இதனையடுத்து கூட்டுக்குழு கூட்டத்திற்கு வருகை தரும் தலைவர்களை வரவேற்று முதல்வர் ஸ்டாலின் இன்று வீடியோ வெளியிட்டுள்ளார்.

தலைவர்களை மனதார வரவேற்கிறேன்! mkstalin welcome all leaders who are coming for JAC meeting

அதில், “தொகுதி மறுவரையறை குறித்த கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் எங்களுடன் இணையும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்களை நான் மனதார வரவேற்கிறேன்.

மார்ச் 5 ஆம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம், பாஜக தவிர தமிழ்நாட்டின் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, நியாயமான எல்லை நிர்ணயம் என்ற ஒரே நோக்கத்திற்காக ஒன்றிணைந்த ஒரு மைல்கல் தருணமாகும். இந்த மிகப்பெரிய ஒருமித்த கருத்து, தமிழ்நாட்டின் ஜனநாயகம் மற்றும் நீதிக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பைப் பிரதிபலித்தது.

இந்த வரலாற்று ஒற்றுமையை கட்டியெழுப்ப, நமது எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள் பாதிக்கப்பட்ட பிற மாநிலங்களின் தலைவர்களுடன் தீவிரமாக ஈடுபட்டு, நமது கூட்டுத் தீர்மானத்தை வலுப்படுத்தினர். தமிழ்நாட்டின் முன்முயற்சியாகத் தொடங்கியது இப்போது ஒரு தேசிய இயக்கமாக வளர்ந்துள்ளது, இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்கள் நியாயமான பிரதிநிதித்துவத்தைக் கோர கைகோர்த்துள்ளன.

இது நமது கூட்டுப் பயணத்தில் ஒரு முக்கியமான தருணம். இது ஒரு சந்திப்பு என்பதை விட இது நமது நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் ஒரு இயக்கத்தின் தொடக்கம் எனலாம். ஒன்றாக, நாம் #Fairdelimitation ஐ அடைவோம்!” என்று ஸ்டாலின் அதில் தெரிவித்துள்ளார்.

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share