கள ஆய்வு : உயர்சிறப்பு மருத்துவமனை, கலைஞர் சிலை, நூலகத்தை திறந்து வைத்தார் ஸ்டாலின்

Published On:

| By christopher

mkstalin visit vellore and open ms hospital and kalaingar statue

வேலூர் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை, கலைஞர் திருவுருவ வெண்கல சிலை, கலைஞர் அறிவாலயம் என்ற பெயரில் நூலகம் ஆகியவற்றை இன்று (ஜூன் 25) திறந்து வைத்தார். mkstalin visit vellore and open ms hospital and kalaingar statue

கள ஆய்வு மேற்கொள்வதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் மூலம் வேலூர் மாவட்டத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை புறப்பட்டு சென்றார்.

ADVERTISEMENT

காட்பாடி ரயில் நிலையத்தில் இறங்கிய அவருக்கு அமைச்சர்கள், திமுக, எம்.பி, எம்.எல்.ஏக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் அங்கிருந்து வாகனம் மூலம் வேலூர் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை திறப்பு விழாவிற்கு சென்ற முதல்வருக்கு, வழியெங்கும் திமுகவினர், பொதுமக்கள் சாலையின் இருபுறமும் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ADVERTISEMENT

தொடர்ந்து வேலூர் அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற விழாவில், தரை மற்றும் ஏழு தளங்களுடன் 197 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அரசு வேலூர் பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்து வைத்து பார்வையிட்டார்.

மேலும், வேலூர் மாவட்டத்தில் 7 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 7 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான கூடுதல் கட்டடங்கள் மற்றும் 2 துணை சுகாதார நிலையங்களுக்கான புதிய கட்டடங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

ADVERTISEMENT

பின்னர் வேலூர் மாவட்டத்தில் ஒருமுறை சிறப்பு வரன்முறை திட்டத்தின் கீழ் மற்றும் பல்வேறு திட்டங்களின் கீழ், நிலங்களை வரன்முறை செய்து 21,776 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

மேலும் பூதூரில் கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள பயனாளிகளின் வீடுகளை பார்வையிட்டு ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கெங்கநல்லூர் பகுதியில் அணைக்கட்டு எம்.எல்.ஏ ஏபி நந்தகுமார் தலைமையில் 1.5 கோடி மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள 8 அடி உயரம் 700 கிலோ எடையுள்ள கலைஞரின் திருவுருவ வெண்கல சிலையை ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அங்கு மத்திய, மாநில அரசுகளின் தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் கலைஞர் அறிவாலயம் என்ற பெயரில் கட்டப்பட்ட நூலகத்தையும் ஸ்டாலின் திறந்து வைத்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share