முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா அவர் பிறந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் இன்று (அக்டோபர் 30) நடைபெற உள்ளது.
கடந்த 28ஆம் தேதி பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் குருபூஜை விழா நிகழ்ச்சிகள் விமரிசையாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
இன்று நடைபெறும் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். பின்னர் சர்கியூட் ஹவுசில் தங்கி இரவு ஓய்வு எடுத்தார்.
அதனையடுத்து இன்று காலை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து முதல்வர் மரியாதை செலுத்தினார்.
அவருடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், டி.ஆர்.பி ராஜா, கீதாஜீவன் மற்றும் திமுக எம்.எல்.ஏக்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோரும் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.
இதனையடுத்து, மதுரையில் 2 புதிய மேம்பாலங்களுக்கான கட்டுமான பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கோரிப்பாளையம் சந்திப்பில் ரூ.190.40 கோடி மதிப்பீட்டிலும், மதுரை – தொண்டி சாலையில் அப்போலோ சந்திப்பில் ரூ.150.28 கோடி மதிப்பீட்டிலும் என இரண்டு உயர்மட்ட மேம்பாலம் அமையவுள்ளன.
தொடர்ந்து மதுரை தெப்பக்குளம் அருகே மருது சகோதரர்கள் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்த உள்ளார்.
அதன்பின்னர் சாலை மார்க்கமாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் கிராமத்திற்கு செல்லும் முதல்வர், அங்கு தமிழக அரசு சார்பில் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் நேரில் மரியாதை செலுத்துகிறார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
31 மாதங்களுக்குப் பிறகு சேலம் – சென்னை விமான சேவை!
தாம்பரத்திலிருந்து செல்லும் ராக்போா்ட், மங்களூரு ரயில்கள்!
பியூட்டி டிப்ஸ்: சருமப் பொலிவுக்கு வெளிப்பூச்சுகள் தற்காலிகமே!
