தமிழ்நாடு தனது உயிர்ப்பிரச்சனையான மொழிப்போரையும், உரிமைப் பிரச்சனையான தொகுதி மறுசீரமைப்பையும் எதிர்கொண்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். mkstalin request to protest against hindi imposition
திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் நாளை (மார்ச் 1) கொண்டாடப்பட உள்ளது. அதனை முன்னிட்டு தனது கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்து அவர் வீடியோ வெளியிட்டுள்ளார்.
தென் மாநிலங்களை தண்டிக்காதீர்கள்! mkstalin request to protest against hindi imposition
அதில், “அன்பு உடன்பிறப்புகளுக்கு ஒரு கோரிக்கை. தமிழ்நாடு தனது உயிர்ப்பிரச்சனையான மொழிப்போரையும், உரிமைப் பிரச்சனையான தொகுதி மறுசீரமைப்பையும் எதிர்கொண்டுள்ளது. இவற்றில் ஒன்றிய பாஜக அரசின் உண்மையான நோக்கத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு என்பது நம் மாநிலத்தின் சுயமரியாதை, சமூக நீதி, சமூக நலத்திட்டங்களை பெரிதும் பாதிக்கும்.
இந்தியாவுக்கே வழிகாட்டியாக நாம் போராட்டத்தை தொடங்க வேண்டும். இப்போது கர்நாடாகா, தெலங்கானா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இருந்து நமக்கான ஆதரவு குரல்கள் வந்துள்ளது.
இதை பார்த்த ஒன்றிய அரசு இந்தியை திணிக்கவில்லை எனக் கூறிவிட்டு அதற்கான அனைத்து முன்னெடுப்புகளையும் தொடங்கிவிட்டது. மும்மொழிக் கொள்கையை ஏற்காத காரணத்தால் தமிழ்நாட்டிற்கான நிதியை இன்னும் வழங்கவில்லை.
மறுசீரமைப்பால் தமிழ்நாட்டில் தொகுதி குறைக்கப்படாது என மட்டுமே ஒன்றிய அரசு சொல்கிறதே தவிர, மற்ற மாநில தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மாட்டோம் என சொல்லவில்லை.
நாம் கேட்பது மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளை பிரிக்காதீர்கள். நாட்டின் நலனுக்காக மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தென் மாநிலங்களை தண்டிக்காதீர்கள்.
அப்படி நடந்தால் தமிழ்நாடும், திமுகவும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். தமிழ்நாட்டின் நலனையும், உரிமையையும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டோம்” என தெரிவித்துள்ளார்.
யார் உண்மையான தேசவிரோதிகள்? mkstalin request to protest against hindi imposition
மேலும் அவர், “தமிழையும் தமிழர்களின் உரிமைகளையும் பாதுகாக்க, திமுக ஒரு போராட்டத்தைக் கையில் எடுத்தால் இந்தியாவை ஆட்சி செய்பவர்கள் அஞ்சுகிறார்கள், அலறுகிறார்கள். நம்மை நோக்கி தேசவிரோதிகள் என்று குற்றம் சாட்டுகிறார்கள். இந்திய ஒன்றியத்தின் பன்முகத் தன்மையையும் மொழிவழிப் பண்பாடுகளையும் சிதைத்து, ஒற்றுமையைக் குலைப்பவர்கள்தான் உண்மையான தேசவிரோதிகள்.
இந்தியும் தமிழைப் போல ஒரு மொழிதானே, கற்றுக்கொள்ளக் கூடாதா என்று கரிசனத்துடன் பேசுகிறவர்களிடம், “சமஸ்கிருதத்திற்குப் பதில் தமிழிலேயே கோயில்களில் அர்ச்சனை செய்யலாமா? தமிழும் செம்மையான மொழிதானே?” என்று கேட்டுப் பாருங்கள். அவர்களின் உண்மையான நோக்கமும், அடையாளமும் அம்பலமாகிவிடும்! அதனால்தான் இந்தித் திணிப்பை எதிர்ப்பதில் உறுதியாக இருக்கிறோம்.” என அந்த வீடியோவில் ஸ்டாலின் பேசியுள்ளார்.