பட்ஜெட் மீது எதிர்க்கட்சிகள் விமர்சனம் : ஸ்டாலின் சொன்ன நேரடி பதில்!

Published On:

| By christopher

mkstalin reply to opposition on tn budget

சட்டமன்றத்தில் கடந்த 14ஆம் தேதி தமிழ்நாடு அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீது எதிர்க்கட்சிகள் சரமாரியாக விமர்சனம் முன்வைத்தனர். mkstalin reply to opposition on tn budget

இந்த நிலையில் அவற்றுக்கெல்லாம் பதிலளித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 16) தனது ’உங்களில் ஒருவன்’ வீடியோவில் விரிவாக பேசியுள்ளார்.

ரூ பயன்படுத்தியது ஏன்? mkstalin reply to opposition on tn budget

அதில், “பட்ஜெட் லோகோவில் மொழிக் கொள்கையில் நாம் எந்தளவுக்கு உறுதியாக இருக்கிறோம் என்பதை காட்ட அதில் ‘ரூ’ என்று குறிப்பிட்டோம். ஆனால் தமிழை பிடிக்காதவர்கள் அதை பெரிய செய்தி ஆக்கிவிட்டார்கள். ஒன்றிய அரசிடம் 100 நாள் வேலை திட்டத்துக்கு ஊதியம் கொடுங்கள், பேரிடர் நிதி கொடுங்கள்.. பள்ளிக் கல்வித்துறைக்கான நிதியை தாருங்கள் என நூறு கோரிக்கை வைத்திருப்பேன்.

ஆனால் அதற்கு எல்லாம் பதில் பேசாத ஒன்றிய நிதியமைச்சர் இதை பேசியிருக்கிறார். அவரே பல பதிவுகளில் ரூ என்று தான் குறிப்பிட்டுள்ளார். ஆங்கிலத்தில் ரூபாயை எளிதாக குறிப்பிட Rs என்று தான் பயன்படுத்துவார்கள். அது எல்லாம் பெரிதாக தெரியாதவர்களுக்கு இது பெரிதாக தெரிகிறது. மொத்தத்தில் இந்தியளவில் நம் பட்ஜெட்டும் ஹிட்டு. தமிழும் ஹிட்!

பட்ஜெட் தயாரானது எப்படி? mkstalin reply to opposition on tn budget

முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனை குழுவில் நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டப்ளோ மற்றும் அறிஞர்கள் ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன், நாராயணன் போன்றவர்கள் ஆலோசனைகளை வழங்கினார்கள். மறுபுறம் அடித்தட்டு மக்களிடம் அவர்களின் தேவைகளை கேட்டு தெரிந்துள்ளோம். அதுமட்டுமல்ல, மற்ற நாடுகள், மாநிலங்களில் மக்களிடம் பிரபலமான திட்டங்களை நம் மாநிலத்துக்கு தகுந்தது போல ஆய்வு செய்து செயல்படுத்தியுள்ளோம். இதற்காக தலைமைச் செயலகத்தில் பல நாட்கள் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை அதிகாரிகள், அமைச்சர்களிடம் பேசி பேசி தான் பட்ஜெட் கொண்டு வந்தோம்.

பட்ஜெட் பற்றி நான் சொல்வதை விட பிரபல பத்திரிகைகளே பாராட்டியுள்ளனர் என்று நாளிழ்தழ்களில் வெளியான செய்திகளையும் கட்டுரையையும் ஸ்டாலின் காண்பித்தார்.

பட்ஜெட் மீது மக்கள் ரியாக்சன்! mkstalin reply to opposition on tn budget

பட்ஜெட்டில் மக்களுக்கு எது பிடித்துள்ளது என்று தெரிந்து கொள்ள சமூகவலைதள பதிவுகளை பார்த்தேன். எக்ஸ் தளத்தில் ஒரு பயனர், ’பெண்களுக்கு கருப்பை வாய் புற்றுநோயை அரசே இலவசமாக தர வேண்டும்’ என்று என்னை டேக் செய்து பதிவு போட்டிருந்தார். இந்த பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளோம்.

தெலங்கானாவில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணிகளில் திருநங்கைகளை ஈடுபடுத்தவுள்ளதாக செய்தியை பார்த்தேன். அதைப் பார்த்து தான் நம் ஊர்காவல் படையில் திருநங்கைகளை ஈடுபடுத்த உள்ளதாக அறிவித்துள்ளோம். இதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு விருதுநகர் அரசு காப்பகத்தில் உள்ள பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இனிப்பு வாங்கிக் கொடுத்தேன். மற்ற மாணவர்கள் என்ன செய்வார்கள் என்று யோசித்து உருவானது தான் தாயுமானவன் திட்டம் கொண்டு வந்தோம். ஆதரவற்ற முதியோருக்காக அன்புச்சோலை திட்டத்தை அறிமுகப்படுத்தினோம். இதை ஆனந்த் சீனிவாசன், சோம வள்ளியப்பன், பிரபாகர் உள்ளிட்ட பொருளாதார நிபுணர்கள் பாராட்டியுள்ளனர். இது எல்லோருக்கும் எல்லாம் பட்ஜெட்.

கடன் கட்டுக்குள் இருக்கிறது! mkstalin reply to opposition on tn budget

எதிர்க்கட்சிகள் ஆக்கபூர்வமான விமர்சனங்களை வைத்தால் பரிசீலிக்கலாம். ஆனால் அவர்களின் விமர்சனத்தில் வன்மம் மட்டுமே தெரிகிறது. மற்றபடி அதில் உருப்படியாக எதுவுமில்லை. எனினும் தமிழ்நாடு அரசு எந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட்டது என்பதற்கான ஆதாரத்தை வெளியிடுகிறேன்.

கடந்த 2011 – 16 வரை தமிழ்நாட்டின் கடன் வளர்ச்சி 108 விழுக்காடாக இருந்தது 2016-21 காலகட்டத்தில் 128 விழுக்காடாக அதிகரித்தது. திராவிட மாடல் ஆட்சி பதவியேற்றதில் இருந்து தற்போதுவரை அதை 93 விழுக்காடாக குறைத்துள்ளோம்.

தமிழ்நாட்டின் கடன் கட்டுக்குள் இருக்கிறது என்று அண்மையில் வெளியான பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடன் வாங்காத அரசு என்று எதுவும் இல்லை. வாங்கும் கடனை முறையாக பயன்படுத்துகிறோமா என்பதுதான் முக்கியம். அந்த வகையில் எதிர்கால தலைமுறையை கருத்தில் கொண்டு தான் முதலீடு செய்துள்ளோம். இதனால் தான் எதிர்க்கட்சிகளின் விமர்சனத்தை வல்லுநர்கள் தவறு என்று குறிப்பிட்டு வருகின்றனர்.

அடுத்து என்ன? mkstalin reply to opposition on tn budget

அறிவித்த திட்டங்களை உரிய காலத்தில் செயல்படுத்த அமைச்சர்களையும், அதிகாரிகளையும் முடுக்கிவிட வேண்டும். இதுதான் என் அடுத்த வேலை.

மாநிலத்துக்கான நிதிக்கும், நீதிக்கும் போராட வேண்டியுள்ளது. அதையும் பார்க்க வேண்டும். 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழகம் 1 ட்ரில்லியன் பொருளாதார வளர்ச்சியை எட்டி எல்லா துறைகளிலும் தமிழ்நாட்டை முதலிடத்துக்கு கொண்டு வரும் வரை ஓய்வே கிடையாது” என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share