ரமலான் நோன்பு : ஸ்டாலின் முக்கிய உத்தரவு!

Published On:

| By christopher

mkstalin order on ramadan kanji

ரமலான் நோன்பு கஞ்சி தயாரிப்புக்காக பள்ளி வாசல்களுக்கு 7,920 மெட்ரிக் டன் அரிசி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். mkstalin order on ramadan kanji

இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒவ்வொரு ஆண்டும் புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரித்து வழங்கும் பொருட்டு, பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி, தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

கடந்த ஆண்டுகளை போலவே, 2025ம் ஆண்டிலும் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என்று இஸ்லாமிய மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

2025ம் ஆண்டு, ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கு ஏதுவாக பள்ளிவாசல்களுக்கு மொத்த அனுமதியின் கீழ் நோன்பு கடைபிடிக்கப்படும் நாட்களுக்கு மட்டும் பச்சரிசி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

பள்ளிவாசல்களுக்கு தேவைப்படும் அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட ஆட்சியாளர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி, 7,920 மெட்ரிக் டன் அரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும். இதனால், அரசுக்கு ரூ.18 கோடியே 41 லட்சத்து 40 ஆயிரம் கூடுதல் செலவினம் ஏற்படும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share