தென்மாவட்ட மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு புதிய பேருந்து முனையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(டிசம்பர் 30) திறந்து வைத்துள்ளார்.
சென்னை கோயம்பேடு பகுதி, ஜி.எஸ்.டி.சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், தென்மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்ள வசதியாகவும் 393 கோடியே 74 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 89.86 ஏக்கர் பரப்பளவில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.
நெல்லை, குமரி, மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு செல்ல வசதியாக 130 அரசு பேருந்துகள் மற்றும் 85 தனியார் பேருந்துகள் நிறுத்தி வைக்கும் வசதியுடன் 14 நடைமேடைகளுடன் நவீன மையமாக அமைக்கப்பட்டுள்ள இந்த பேருந்து நிலையத்திற்கு ‘கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்’ (கே.சி.பி.டி) என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இதனை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திறந்து வைத்துள்ளார். மேலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள கலைஞர் சிலையையும் முதல்வர் திறந்து வைத்தார்.
தொடர்ந்து பேட்டரி காரில் பயணித்து கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்தை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். பின்னர் விழா மேடையேறிய முதல்வர் அங்கிருந்து பேருந்து சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இனி இங்கிருந்து தினசரி ஒரு லட்சத்திற்கும் அதிகமான பயணிகள் செல்லும் வகையில் 840 தனியார் பேருந்துகளுடன் 2,130 பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
”ஒரு முறையாவது பாகிஸ்தான் செல்லுங்கள்”: ரசிகருக்கு தோனி அறிவுரை!

Comments are closed.