முதல்வர் ஸ்டாலின் உடல்நிலை… அப்பல்லோ கொடுத்த அப்டேட்!

Published On:

| By christopher

Tamil Nadu exports affected by US tariffs

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்னும் 3 நாட்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதை அடுத்து, மருத்துவமனையில் இருந்து தனது பணியை தொடர்ந்து மேற்கொள்வார் என அப்போலோ மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. mkstalin health update by apollo hospital

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டதை அடுத்து சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக இன்று (ஜூலை 21) காலை அனுமதிக்கப்பட்டார்.

ADVERTISEMENT

அங்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு முதல்வருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் விரைவில் நலம்பெற வேண்டும் என்று பல்வேறு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் ஸ்டாலின் உடல்நிலை குறித்து இரவு 9 மணியளவில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அதில், “தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஏற்பட்ட லேசான தலைச்சுற்றல் தொடர்பான அறிகுறிகளைக் கண்காணிப்பதற்காக கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மேலும் மூன்று நாட்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது, மேலும் மருத்துவர்கள் அளித்த பரிந்துரைப்படி சில பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.

எனவே மருத்துவமனையில் இருந்து தனது பணிகளைத் தொடர்ந்து செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share