வரும் அக்டோபர் 30ஆம் தேதி தேவர் ஜெயந்தி குருபூஜையில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் பசும்பொன் கிராமத்திற்கு செல்ல உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர போராட்ட வீரரும், சமுதாய சமநிலைக்காகவும்,தேசியமும், தெய்வீகமும் தனது இரண்டு கண்களாகப் போற்றியவருமான மாபெரும் தலைவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை வரும் 30ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதில் தமிழக அரசியல் தலைவர்கள், மத்திய பாஜக அமைச்சர்கள் ஆகியோர் ஏற்கெனவே பங்கேற்பதாக அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரம் பசும்பொன் கிராமத்தில் நடைபெறும் தேவர் குருபூஜை விழாவில் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.
இதற்காக வரும் 29ஆம் தேதி காலை விமானம் மூலம் செல்லும் முதல்வர் ஸ்டாலின் மதுரையில் தங்குகிறார்.
அக்டோபர் 30ஆம் தேதி கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்துகிறார்.
அதன்பின்னர் மதுரையிலிருந்து சாலை மார்க்கமாக பசும்பொன் சென்று அங்கு நடைபெறும் தேவர் குருபூஜையில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்கிறார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பிக் பாஸ் சீசன் – 7: விஷ்ணுவிற்கு தரப்படுமா ரெட் கார்டு?
பியூட்டி டிப்ஸ்: சமூக வலைதள அழகுக் குறிப்புகள்… கண்மூடித்தனமாக நம்பாதீர்கள்!