”தமிழ்நாட்டில் இப்போது 2வது இடத்திற்கு யார் வருவது என்பதில் தான் அவர்களுக்குள் போட்டி நடந்து வருகிறது. மக்களை பொறுத்தவரை திமுக தான் ஆளுங்கட்சி” என்று ஸ்டாலின் பேசினார். mkstalin attack vijay and eps on 2nd place
சென்னை கொளத்தூரில் ரமலான் திருநாளை முன்னிட்டு திமுக சார்பில் இஸ்லாமியர்களுக்கு பரிசு பொருள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி இன்று (மார்ச் 29) மாலை நடைபெற்றது.
இதில் பங்கேற்ற திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நோன்பு திறந்து சிறப்புரையாற்றினார்.
கொள்ளையடிக்க போகிறவர் மாதிரி… mkstalin attack vijay and eps on 2nd place
அவர் பேசுகையில், “நல்லிணக்கத்தை விரும்புகிற இஸ்லாமிய சகோதரர்களையும் திமுக-வையும் பிரிக்க முடியாது. அதனால்தான் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். இது போன்ற விழாக்களை பலரும் நடத்துவார்கள், ஆனால் இஸ்லாமியர்களுக்கு தீங்கு நடக்கும்போது வாய் திறக்க மாட்டார்கள்.
குடியுரிமை திருத்த சட்டம் உட்பட சிறுபான்மையினருக்கு எதிரான செயல்களில் முதல் எதிர்ப்பு குரல் கொடுத்து கொண்டிருப்பது திமுக தான். இப்போது கூட வக்ஃப் வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்ற கூட்டக்குழுவிலும், திமுக சார்பில் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறோம்.
இரண்டு நாட்களுக்கு முன்பு கூட, இஸ்லாமியர்களை வஞ்சிக்கும் இந்த சட்ட திருத்தத்தை முழுமையாக திரும்ப பெற வேண்டும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தனித் தீர்மானம் நிறைவேற்றி, நம் அரசின் நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்துள்ளோம்.
இந்த தீர்மானத்தை தமிழ்நாட்டில் மட்டுமல்லாது இந்திய மற்றும் உலக அளவில் இருக்ககூடிய இஸ்லாமிய அமைப்புகள் பாராட்டி கொண்டிருக்கின்றனர். ஆனால், இந்த தீர்மானத்தை நிறைவேற்ற கூட எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் பங்கேற்கவில்லை. ஏனென்று உங்களுக்கே தெரியும்.
இரவோடு இரவாக திட்டம் தீட்டி, அவர் விமானத்தை பிடித்து டெல்லிக்கு போனார். அங்கு இறங்கி கொள்ளையடிக்க போகிறவர் மாதிரி நான்கு காரில் மாறி மாறி போயிருக்கிறார். அப்படி சென்றவர் இந்த சட்டத்தை கொண்டுவரப்போகிற அமித் ஷாவை சந்தித்திருக்கிறார் என்பது தான் முக்கியம். இந்த தீர்மானத்தை நாம் சட்டமன்றத்தில் கொண்டுவரப் போகிறோம் என்று தெரிந்தும் அவர் வரவில்லை.
திமுக தான் எப்போதும் ஆளுங்கட்சி! mkstalin attack vijay and eps on 2nd place
இன்றைக்கு பிரதான எதிர்க்கட்சி அதிமுக தான். இதில் வேடிக்கை என்னவென்றால் ’அடுத்து நாங்கள்தான் ஆளும் கட்சி, ஆளும் கட்சி’ என்று சொல்லிக்கொண்டிருந்த எதிர்க் கட்சி தலைவர், இன்று ’நாங்கள்தான் அடுத்த எதிர்க்கட்சி’ என்று சொல்லுகிறார். இந்த நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார். ஆகவே இப்போது 2வது இடத்திற்கு யார் வருவது என்பதில் தான் அவர்களுக்குள் போட்டி நடந்து வருகிறது. மக்களை பொறுத்தவரை திமுக தான் எப்போதும் ஆளுங்கட்சி. நான் மமதையில் சொல்லவில்லை. மக்களின் ஆதரவை வைத்தே சொல்கிறேன்.
ஏற்கெனவே எதிர்க் கட்சியினரை சிறுபான்மையினர் குறிப்பாக இஸ்லாமியர்கள் முற்றிலும் புறக்கணித்து வந்தார்கள். இப்போது எதிர்க் கட்சியினர் என்ன செய்வது என்று முடிவெடுக்க முடியாமல் திணறுகிறார்கள்.
சட்டமன்றத்தில் நான் அவர் டெல்லிக்கு போனதைப் பற்றி பேசினேன். அப்போது ’உங்கள் கூட்டணி குறித்து எதுவானாலும் பேசிவிட்டு வாருங்கள், ஆனால் இருமொழி கொள்கை குறித்து பேசிவிட்டு வாருங்கள்’ என்று சொன்னேன். அவர் அங்கு சந்தித்து பேசிவிட்டு, இருமொழி கொள்கை குறித்து அழுத்தமாக பேசியதாக சொன்னார். தமிழ்நாட்டு மக்கள் சார்பில் நான் அவருக்கு நன்றி சொல்கிறேன்.
அதே போல் வக்ஃப் வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக அவர் பேச வேண்டும். அப்போதும் கார் மாறி மாறி போய் பேசுங்கள் என்று சட்டமன்றத்தில் சொன்னேன். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுகவினர் அதை அவை குறிப்பில் இருந்து நீக்கச் சொன்னார்கள். புண்படுத்தி இருந்தால் நீக்கிவிடுங்கள் என்று நானும் சொன்னேன்.
எதற்காக இதை சொல்கிறேன் என்றால், இப்படி பயந்து அஞ்சி நடுக்கும் செயலைத்தான் எதிர்க் கட்சி இன்று செய்து வருகிறது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இஸ்லாமியர்களுக்கு எதிரானதை திமுக எதிர்க்கும்” என ஸ்டாலின் பேசினார்.