அமெரிக்காவில் தான் சைக்கிள் ஓட்டியது குறித்து கேள்வி எழுப்பிய காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்திக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜாலியாக பதில் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். இதுவரை சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா, சிகாகோ சென்றுள்ள அவர் பல்வேறு நிறுவனங்களுடன் முதலீட்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
இந்த நிலையில் அமெரிக்காவின் கடற்கரையில் மகிழ்ச்சியாக தான் சைக்கிள் ஓட்டி செல்லும் வீடியோ ஒன்றை இன்று காலை தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்த நிலையில் அதனை தனது எக்ஸ் தள பக்கத்தில் ரீபோஸ்ட் செய்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, ”சகோதரரே, நாம் இருவரும் எப்போது ஒன்றாக சென்னையில் சைக்கிளிங் செல்வது?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு முதல்வர் ஸ்டாலின், “அன்பு சகோதரரே ராகுல் காந்தி, உங்களுக்கு ஓய்வு கிடைக்கும் போதெல்லாம், ஒன்றாக சைக்கிளில் பயணம் செய்து சென்னையின் இதயத்தில் வலம் வருவோம்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், “நான் உங்களுக்கு கொடுக்க வேண்டிய ஒரு இனிப்புப் பெட்டி இன்னும் நிலுவையில் உள்ளது. நமது சைக்கிள் பயணத்திற்கு பிறகு, என் வீட்டில் இனிப்புகளுடன் ஒரு சுவையான தென்னிந்திய மதிய உணவை அனுபவிப்போம்” என்று மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சியுடன் பதில் அளித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
சென்னை வந்ததும் நேராக மாமல்லபுரம் சென்ற மகன் பலி : கதறும் தந்தை!
அண்ணன் வர்றார் வழிவிடு… ‘கோட்’ ஸ்பெஷல் ஷோ-க்கு பெர்மிஷன் கிடைச்சாச்சு!