கலைஞர் 102-ஆவது பிறந்தநாளான இன்று (ஜூன் 3) செம்மொழி நாளாக கொண்டாடப்படுக்கிறது. சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் வாழ்ந்த கோபாலபுரம் இல்லம், மெரினா கடற்கரையில் கலைஞரின் நினைவிடம், ஓமந்தூரார் தோட்டம் உள்ளிட்ட இடங்களில் கலைஞர் திருவுருவப்படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இன்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து சென்னை கலைவாணர் அரங்கத்தில், செம்மொழி நாள் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் சார்பில், விழா அரங்கில் அமைக்கப்பட்ட கலைஞரின் வாழ்வை விளக்கும் விதமாக அமைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சி, தமிழ் மொழி உருவாக்கம், தொல்லியல் சான்றுகளை உள்ளடக்கிய செம்மொழி கண்காட்சி அரங்கினை பார்வையிட்டார். mk stalin watches kalaignar ellorukkum ellamum

தொடர்ந்து, கலைஞர் தன் சிந்தனையால் தமிழகத்தை எப்படி சீர்மிகு மாநிலமாக வடிவமைத்தார் என்பதையும், தன் வாழ்வனுபவங்கள் வாயிலாக சமூக நீதி எனும் பெரும்பரப்பில் வானுயர நின்று தமிழ் மக்கள் தானுயிர அவர் கொண்டு வந்த திட்டங்களுள் வரலாற்றில் நிலைத்த இந்தியாவில் முதல்முறையாக உலகத்திற்கே முன் மாதிரியாக இருந்த மாபெரும் திட்டங்கள் குறித்து தமிழ்நாடு மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் தலைமையில் மாநில திட்டக்குழு தயாரித்த மின்னம்பலம் நிர்வாக இயக்குனர் மற்றும் ஆசிரியருமான காமராஜ் இயக்கிய ‘கலைஞர் எல்லோர்க்கும் எல்லாமுமாய்’ ஆவணப்படம் திரையிடப்பட்டது.
இந்த ஆவணப்படத்தை முதல்வர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கண்டுகளித்தனர்.

இதனை தொடர்ந்து, 2025-ஆம் ஆண்டிற்கான கலைஞர் செம்மொழி விருதை எழுத்தாளர் தாயம்மாள் அறவாணனுக்கு ஸ்டாலின் வழங்கினார். அத்துடன், ரூ.10 லட்சத்திற்கான காசோலை, கலைஞர் சிலை மற்றும் சான்று அவருக்கு வழங்கப்பட்டது.
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில், சுப்பிரமணியம் எழுதிய ‘சங்க இலக்கியம் சொல்வளம்’ மற்றும் ராசேந்திரன் சங்கர வேலாயுதம் எழுதிய ‘தமிழ் வினையடியகள் வரலாற்று மொழிகள் ஆய்வு’ புத்தகங்களை ஸ்டாலின் வெளியிட்டார்.
செம்மொழி நாளை ஒட்டி தமிழகம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் சான்றிதழ் மற்றும் காசோலை வழங்கினார்.

தமிழ் மொழிக்காக ஆற்றிய அகப்பெரிய பங்களிப்பை கருத்தில் கொண்டு அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உயர்த்தப்பட்ட உதவித்தொகையான ஒப்படைப்பு ஆணைகளை ஸ்டாலின் வழங்கினார்.
தமிழக அரசின் நான்கு ஆண்டுகள் சாதனைகளை தொகுத்து செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறையின் தமிழரசு நிறுவனத்தின் ‘நாடு போற்றும் நான்காண்டு தொடரட்டும் இது பல்லாண்டு’ சிறப்பு புத்தகத்தை ஸ்டாலின் வெளியிட்டார்.
நிகழ்ச்சியின் இறுதியாக தமிழின் தொன்மையையும் இளமையையும் விவாதிக்கும், ‘செம்மொழியின் தனிச்சிறப்பு – அதன் தொன்மையே! அதன் இளமையே!’ என்ற தலைப்பில் சுகி சிவம் தலைமையில் சிறப்பு பட்டமன்றம் நடைபெற்றது. mk stalin watches kalaignar ellorukkum ellamum