ADVERTISEMENT

திருச்சியில் கலைஞர் சிலை: ஸ்டாலின் திறந்து வைத்தார்!

Published On:

| By Selvam

கலைஞர் நினைவு நாளை ஒட்டி திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் நிறுவப்பட்டுள்ள கலைஞர் முழுவுருவச் சிலையை திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 7) காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

முன்னாள் முதல்வர் கலைஞரின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதை ஒட்டி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் அமைதிப் பேரணி நடைபெறுகிறது. சென்னையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெறுகிறது.

ADVERTISEMENT

மேலும், திமுக நிர்வாகிகள் சார்பில் நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT

 

இந்தநிலையில், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் தலைமையில் திருவெறும்பூரில் நிறுவப்பட்டுள்ள கலைஞரின் முழுவுருவச் சிலையை முதல்வர் ஸ்டாலின் அவரது முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியின் போது, திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளரும் திமுக நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி, இளைஞரணி செயலாளரும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உடனிருந்தனர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

Olympics 2024: டோக்கியோவில் விட்டதை பாரிஸில் பிடிப்பாரா அதிதி அசோக்?

கேகேஎஸ்எஸ்ஆர், தங்கம் தென்னரசுக்கு எதிரான சூமோட்டோ வழக்கு: உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share