கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 15) திறந்து வைத்தார்.
சென்னை கிண்டியில் உள்ள கிங் நிறுவன ஆராய்ச்சி வளாகத்தில் 4.89 ஏக்கர் பரப்பளவில் ரூ.230 கோடி மதிப்பீட்டில் கலைஞர் உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.
இதில் 1000 படுக்கைகளுடன் தரை தளம் மற்றும் 6 மேல் தளத்துடன் அதிநவீன வசதிகளுடன் இதயம், சிறுநீரகம், மூளை நரம்பியல், ரத்த நாளங்கள், குடல் – இரப்பை, புற்றுநோய் ஆகிய பிரிவுகளுக்கு சிறப்பு அறுவை சிகிச்சை துறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை ஜூன் 5-ஆம் தேதி திறந்து வைக்க குடியரசு தலைவர் திரவுபதி முர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால் திரவுபதி முர்வு செர்பியாவுக்கு சென்றதால் மருத்துவமனை திறப்பு விழா தள்ளிப்போனது. திரவுபதி முர்மு இந்தியா திரும்பிய பிறகும் மருத்துவமனை திறந்து வைப்பது குறித்து குடியரசு தலைவர் அலுவலகத்திலிருந்து முறையான தகவல்கள் கிடைக்கவில்லை.
இந்தநிலையில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செல்வம்
“செந்தில் பாலாஜியை நீக்குங்கள்” : ஆளுநரிடம் அதிமுக மனு!
காவேரி மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜியை மாற்ற உயர்நீதிமன்றம் அனுமதி!
